பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 r ஆரணிய காண்ட ஆய்வு

புதுவை மாநிலத்தில் தமிழாசிரியர்கள் போராடி, உயர் நிலைப் பள்ளிகட்கு அன்று - நடுநிலைப் பள்ளிகட்குத் தலைமையாசிரியர் பதவி அளிக்கச் செய்தனர். உடனே, மற்ற பாடத்து ஆசிரியர்கள் போராடியதால், தமிழாசிரியர் கள் தலைமையாசிரியர் பதவியிலிருந்து கீழே இறக்கப் பட்டனர். இப்போது புதுச்சேரி மாநிலத்தில் அரசுக் கல்வித் துறையில் உள்ள அலுவலர்களுள் யாரும் இதற்குப் பொறுப்பாளர் ஆகார். இது முன்பு எப்போதோ நடந்தது. ஆனால், அந்தக்காலத்தில் அகத்தியர் தமிழை இயம்பியதால் புகழ் பெற்றாராம். காலத்தின் கோலம் என்னே!

தமிழ் நாட்டின் வடக்கே இருந்து கொண்டு காட்டில் இராமனை வரவேற்ற அகத்தியர் எந்த மொழியில் பேசி யிருப்பார்? இராமனோடு எந்த மொழியில் உரையாடி யிருப்பார்? - என்பதை அறிஞர்கள் ஆய்க. மற்றும், கம்பராமாயணம் சுந்தர காண்டத்தில்,

தென்சொல் கடந்தான் வடசொல் கடற்கு எல்லை தேர்ந்தான்" என இராமன் கம்பரால் சுட்டப்பட்டிருப்பதும் கண்டு நினைவுகூரத் தக்கது.

வந்தனன் மருத்துவன் .

தேவர், தவத்தோர், அந்தணர் முதலியோரின் துன்ப நோயாக உள்ள அரக்கர்களை வேரோடு அழிக்க வல்ல மருத்துவன் வந்து விட்டான் என அகத்தியன் இராமனது வருகைக்கு மகிழ்ந்தான்:

'உய்க்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர்

அந்தணர் அறத்தின் நெறி கின்றனர்கள் ஆனார் வெந்திறல் அரக்கர் விடவேர் முதல் அறுப்பான் வந்தனன் மருத்துவன் எனத்தனி வலிப்பான்” (44)