பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 о ஆரணிய காண்ட ஆய்வு

வட பகுதியில் தொன்மைக் காலத்தில் இருந்த திராவிடர்கள் பின் தெற்கே விரட்டப்பட்டார்கள் என நேரு முதலியோர் கூறியுள்ளமை - ஆகிய சான்றுகளைக் கொண்டு, ஒரு காலத்தில் தமிழ் வட தமிழாகவும் இருந்தது; இப்போது தென் தமிழ் ஆகிவிட்டது எனக் கொள்ளல் வேண்டும்.

அகத்தியர் தமிழ் இயம்பி இசை கொண்டாராம். இது அந்தக் காலம். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் ஆசிரியர்கள் பிற மொழி ஆசிரியர்களின் செருப்புக் கால்களின் கீழ் மிதிபட்டு நசுங்கினர். உயர்நிலைப் பள்ளிகளில் கிடக்கட்டும். நடுநிலைப் பள்ளிகளில் கூடத் தமிழாசிரியர்கள் தலைமை ஆசிரியராக இருக்க முடியாத மானக்கேடான நிலை இருந்தது. மற்ற மொழி ஆசிரியர்களின் கையெழுத்துகளின் கீழே தமிழாசிரியர்கள் கையெழுத்து இட வேண்டும். (இதை என் சொந்தப் பட்டறிவிலிருந்தே சொல்லு கின்றேன்).

அகத்தியப் படலத்தைத் தமிழ்ப் படலமாகவே செய்துள்ள கம்பரின் மொழிப் பற்று - மொழி உணர்வு - ஏன், மொழி வெறி - மிகவும் பாராட்டத் தக்கன. ஆனால், கம்பரின் நூல் முழுவதையும் நோக்கினால், இந்தக் காலம் போலவே அந்தக் காலத்திலும் அஞ்சிக் கொண்டே தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தியுள்ளார் என எண்ணத் தோன்று கிறது. அதற்குக் காரணமும் உண்டு. .

அடுத்த பாடலில், வேதியர்கள் வேதமொழி பல கூற அகத்தியன் இராமன் முதலிய மூவரையும் குளிர்ந்த சோலைக்குள் அழைத்துச் சென்றானாம்.

வேதியர்கள் வேதமொழி வேறுபல கூற......

போதுமணம் காறுகுளிர் சோலைகொடு புக்கான்' (48) அகத்தியனது விருந்தோம்பலால் உள்ளம் குளிர்ந்த இராமனை அங்கேயே இருக்கும்படி அகத்தியன்