பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 71

"நதிப் படிய கின்று பழி தீர நல்கும் கோகரணம்’

- (3-79-5-7) "கங்கையின் புனித மாய காவிரி நடுவு' இது - தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை - 894

'பொன்னி கல்நதி மிக்க நீர் பாய்ந்து

புணரி தன்னையும் புனித மாக்குவது' இது - பெரிய புராணம் - 404

“காவிரி நீர்ப் பெருங் தீர்த்தம்” (பெ. பு. 3577) 'பொய்யாத பொன்னிப் புது மஞ்சனம் ஆடி’

இது - விக்கிரம சோழன் உலா - 81

தன்பால் நீராடிய அர்ச்சுனன், அரிச்சந்திரன், சுசீலை ஆகியோர்க்கும், ஒரு பன்றி - மண்டுகம் (தவளை), முதலை ஆகியவற்றிற்கும் காவிரி தீது நீக்கி நற்பேறு கிடைக்கச் செய்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.

சிங்தை தொடர்தல்

இறுதியாக, இராமன் அகத்தியனிடம் விடைபெற்றுச் சீதையோடும் தம்பி இலக்குமணனோடும் அகத்தியனது தொடரும் மனத்தோடும் சென்றான்.

'பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின்பின்

போக, முனி சிந்தை தொடரக் கடிது போனான்’ (59)

பாகு அனைய சொல்லி - வெல்லப் பாகு போலும் இனிய சொல் பேசும் சீதை. முனிவனின் சிந்தை தொடர்ந்தது என்பது, அகத்தியன் நீண்ட நேரம் - நீண்ட காலம் இராமனை எண்ணிக் கொண்டிருந்தான் - என்பதை அறிவிக்கும். இது ஒரு சுவையான கருத்து வெளிப் பாடாகும்.

ஒருவர் நெஞ்சு மற்றொருவரின் பின் செல்வதாக இலக்கியங்களில் கூறுவது உண்டு. இக் கருத்து,