பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 ) ஆரணிய காண்ட ஆய்வு

வடிவோடு வந்திருக்கக் கூடுமா? அல்லது கருடன்தானா? என்ற ஐயத்தோடு பார்வையைச் செலுத்தினர்.

இராம இலக்குமணரைக் கண்ட சடாயு, இவர்கள் வில் ஏந்தி வில் மறவராகக் காணப்படுகின்றனர் - அதோடு தவக்கோலத்தினராகவும் தோற்றம் அளிக்கின்றனர் - இவர்கள் யாராக இருக்கலாம் என ஐயுற்று மேலும் எண்ணுகிறான்:

இந்திரன் முதலிய தேவர்களை யான் எப்போதும் காண்பேன். திருமாலும், பிரமனும், சிவனும் மறைவிலாது எனக்குக் காட்சி தருவர்; அவர்களுள் யாராகவும் இவர்கள் தெரிய வில்லையே. -

"புரங்தரன் முதலிய புலவர் யாரையும்

கிரந்தரம் நோக்குவன் கேமியானும்அவ் வரக்தரும் இறைவனும் மழுவலாளனும் கரந்திலர் என்னையான் என்றும் காண்பெனால்’ (12)

புரந்தான் = இந்திரன். நேமியான் = திருமால். மழுவலாளன் = சிவன், வைத்தீசுவரன் கோயில் என்னும் புள்ளிருக்கு வேளுர்ச் சிவனைச் சடாயு வழிபட்டதாக ஞான சம்பந்தர், தம் புள்ளிருக்கு வேளுர்த் தேவாரப் பதிகத்தின் பெரும்பாலான பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் ஒன்றாவது காண்போமே:

'மறங்கொண்டு அங்கு இராவணன்தன் வலிகருதி

வந்தானைப் புறங்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்கு வேளுரே” (6) புள் = பறவை. கழுகாகிய பறவையின் அரசன் சடாயு. இவன் வழிபட்டதால் புள் இருக்குவேளுர் என்னும் பெயர் உண்டாயிற்று. இந்தப் பாடலில், சடாய்' என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. உ. சாரியை சேரின் சடாயு என்றாகும்.