பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 77

திருப் புள் குழி என்னும் வைணவப் பதியிலும் சடாயு வழிபட்டதாகத் திருமங்கையாழ்வார் கூறியுள்ளார். புள் என்பது சடாயுவைக் குறிப்பது.

'யான் என்றும் காண்பென்' எனச் சடாயு கூறியதாகக் கம்பர் பாடியிருப்பது இதனால் தானோ!

கால் தூசு

மேலும் சடாயு எண்ணுகிறான். யான் அழகில் சிறந்த காமன் எனப்படும் மன்மதனைக் கண்ணால் பார்த்துள்ளேன். அந்த மன்மதன் இவர்களின் கால் தூசுக்கும் ஒப்பாக மாட்டான்:

“காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன்

தாமரைச் செங்கண்.இத் தடக்கை வீரர்கள் பூமரு பொலங் கழல் பொடியினோடும் ஒப்பு - ஆம்என அறிகிலேன் ஆர்கொலாம் இவர்?" (13) காமன்=மன்மதன். கழல்பொடி=கால் தூசு, கம்பர் தமது பாடலில் உலகியல் வழக்காறு ஒன்றை அப்படியே பிழிந்து வைத்துள்ளார். இவர்கள் அவர்களின் கால் தூசுக்கும் ஒப்பாக மாட்டார்கள்” என்பது போன்றது அது.

பின்னர், சடாயு இராமஇலக்குமணரை நோக்கி, நீங்கள் யார் என வினவினான். நாங்கள் தயரதன் மைந்தர் என அவர்கள் விடையிறுத்தனர்.

தோள்கள் வலியவோ?

வேந்தர் வேந்தனாகிய உங்கள் தந்தை தயரதன் தோள் வலிமையுடன் உள்ளானா எனச் சடாயு நலம் வினவினான்:

'விரைத்தடம் தாரினீர் வேந்தர்வேந்தன் தன்

வரைத்தடம் தோள் இணை வலியவோ என்றான்” (18)