பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 ஆரணிய காண்ட ஆய்வு

உலகியலில் நலம் வினவுபவர்கள், எல்லாரும் நலமா என்பர். சிலர், யாருக்கும் உடம்புக்கு ஒன்றும் இல்லையே, எல்லாரும் நலம்தானே என்பர். இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது, தயரதனின் தோள்கள் வலியவா?என்று கேட்டது. இப்போது ஆளே இல்லை - இறந்து விட்டான். எனவே அவ்வாறு கேட்க வைத்துள்ளார் கம்பர். கேகய நாட்டில் இருந்த பரதனுக்கு மடல் கொண்டு போன தூதரிடம் பரதன் தீது இலன் கொல் திருமுடியோன்' என வினவினான். ஆனால் திருமுடியோன் இறந்து விட்டான். பின், இராமன் அழியாத செல்வத் தோடு உள்ளானா? என வினவினான். ஆனால் இராமனோ செல்வம் இழந்து காட்டிற்குப் புறப்பட்டு விட்டான். படிப்பவர்க்குச் சுவையூட்டக் கம்பரின் எழுதுகோல் இடத் திற்கு ஏற்ப வளைந்து கொடுக்கும். கழுவிய கண்ணீர்

தயரதன் இறந்து விட்டான் எனமைந்தர்கள் கூறியதும் நண்பனாகிய சடாயு மயக்கமாய் விழுந்து விட்டான். அவனது மயக்கத்தை இராம இலக்குமணர் முகத்தில் நீர் கொட்டிக் கழுவித் தெளிய வைத்தனர்.நீர் என்றால் கண்ணிராகும். .

தழுவினர் எடுத்தனர் தடக்கையால், முகம் கழுவினர் இருவரும் கண்ணின் கீரினால்” (20). மயக்கம் உற்றவரது முகத்தில் தண்ணீர் தெளிப்பது வழக்கம், இங்கே இருவரும் சடாயுவைக் கைகளால் தூக்கி அணைத்து, சடாயுவின் முகத்திற்கு மேலே தங்கள் முகங்களை வைத்துக் கொண்டு கண்ணிர் விட்டு அழுதனர். கண்ணிர் சடாயுவின் முகத்தில் பட்டதும் அவன் எழுந்தான். கம்பன் கற்றுத் தந்த கண்ணிரால் கழுவுதல்’ என்பதை இப்போது சிலர் எதுஎதற்கோ பயன்படுத்துகின்றனர்.