பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 85

என்பது பாடல் 'உயிர் கொடுப்பான் தோழன்” என்னும் முதியோர் மொழியும் ஈண்டு எண்ணத்தக்கது.

இந்தக் கருத்துகளையெல்லாம் கம்பரின் பாடலோடு ஒத்திட்டு நோக்கின், தோண்டத் தோண்டக் கம்பரின் பாடலில் சுவைநீர் ஊறுவதை அறிந்து மகிழலாம்.

உயிரும் உடலும்

மேலும் உருகுகிறான் சடாயு. சம்பராசுரனோடு செய்த போரில் உனக்குத் துணையாக இருந்த என்னை நோக்கி, நீ (சடாயு) உயிர் - நான் (தயரதன்) உடல் என உலகறியக் கூறினாய்; ஆனால் நல்லுணர்வு இல்லாத எமன், உயிரை (சடாயுவை) மண்ணுலகில் விட்டு, உடலை (தயரதனை) விண்ணுலகிற்கு ஏற்றிவிட்டான்.

'தயிர் உடைக்கும் மத்துஎன்ன உலகைகலி

சம்பரனைத் தடிந்த அந்நாள் அயிர்கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய

நீ உடல் நான் ஆவிஎன்று செயிர் கிடத்தல் செய்யாத திருமணத்தாய்

செப்பினாய் திறம்பா நின்சொல் உமிர்கிடக்க உடலை விசும்பு ஏற்றினார்

உணர்வு இழந்த கூற்றினாரே' (23) தயிரைக் கடைந்து கலக்கும் மத்தைப் போல் சம்பராசுரன் உலகைக் கலக்கி வருந்தினானாம். கத்தியால் வெட்டும் கட்டித் தயிரா யிருந்தால்தான் இந்த உவமை பொருந்தும். மத்து தயிரை உடைக்கிறதாம்.

கடல் வலயத்தவர் = கடல் சூழ்ந்த உலக மக்கள். அயிர் = மணல். செயிர் = குற்றம். தயரதன் குற்றமற்ற உள்ளத்தனாம்.