பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ) ஆரணிய காண்ட ஆய்வு

இந்தப் பாடலில் வியப்புச் சுவை உள்ளது. எமன் உடலைக் கீழே விட்டு உயிரை மேலே எடுத்துச் செல்வது வழக்கம். இங்கே, உயிரைக் கீழே விட்டு உடலை மேலே எடுத்துச் சென்றானாம். அதாவது: தயரதனால் உயிர் என்று சொல்லப்பட்ட சடாயுவைக் கீழே விட்டான். தயரதனால் உடல் என்று சொல்லப்பட்ட அவனை மேலே கொண்டு சென்றான். இது ஒரு வகை வியப்பன்றோ!

எண்ண இயைபு

எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி தொடர்பான எண்ணத்தை, இப்போது உள்ள நிலைமைக்கு ஏற்ற எண்ணத் துடன் இணைத்து இயைபு படுத்துவது எண்ண இயைபு' - Association of Thoughts grsπύu®ιό -- GT ó t 131 32(56)16)&; உளவியல் கருத்தாகும்.

எப்போதோ சம்பராசுரனுடன் போர் செய்த தயரத னுக்குச் சடாயு உதவி செய்த போது, சடாயுவை உயிராகவும் தன்னை உடலாகவும் தயரதன் கூறியதைச் சடாயு இப்போது எண்ணி, இயைபு படுத்திப் பார்த்து, உயிர் கீழே கிடக்க உடலை எமன் மேலே கொண்டு சென்றது முரணான வியப்பு என்கிறான். இது ஒரு வகை எண்ண இயைபாகும்.

நீ காட்டிற்கு வராதே என்று சீதையை இராமன் தடுத்ததை, பின்னர்க் காட்டிற்கு வந்து தொல்லைப்பட்ட போது எண்ணி வருந்தியதும் எண்ண இயைபாகும்.

கணவனாகிய வாலியை இழந்த தாரையின் கைம்மைக் கோலத்தைச் கண்ட இலக்குவன், தன் தந்தை தயரதனைப் பிரிந்த தாய்மார்கள் மூவரும் கொண்டிருந்த கைம்மைக் கோலத்தை இணைத்து எண்ணிப் பார்த்ததும் எண்ண இயைபாகும். இது அடுத்த கிட்கிந்தா காண்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.