பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ) ஆரணிய காண்ட ஆய்வு

'நமனை அஞ்சோம் என நாவுக்கரசர் அவனைப் பொருட்படுத்தாது கூறுகிறார். அந்தகா வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே' என அருணகிரிநாதர் அறைகூவல் விடுகிறார். எமனது திறமையற்ற ஒரு செயலுக்காகப் புறநானூற்றுப் புலவர் ஒருவர் இரக்கப்பட்டுக் கேலி செய்கிறார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய ஆடுதுறை மாசாத்தனார் பாடிய பாடல் அது.

என்ன சொல்கிறார்: எமனை எண்ணி, இரக்கம் அற்ற எமனே! நீ மிகவும் அறிவிலி. விதையைச் சமைத்து உண்டு விட்டாயே. விதை இருந்தால் அல்லவா.அதன் வாயிலாக மேலும் பல உணவுப் பொருள்கள் விளையும்? நீ விதையையே உண்டு விட்டாயே. கிள்ளி வளவன் இருந்தால் அவன் பல போர்கள் செய்து பல உயிர்களைக் கொன்று உன் பசி தீர்ப்பானே - நீ அவனையே கொன்று விட்டாய். இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்? நீ சூழ்ச்சிதெரியாத அப்பாவி எமன்

"கனி பேதையே நயன்இ கூற்றம்

விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை ......

இனியார் மற்றுகின் பசிதீர்ப் போரே” (227 1, 2 & 11)

இதுதான் இப்படியெனில், தனக்கு உள்ள உரிமையின் படி-விதிப்படி மார்க்கண்டேயன் உயிரைப் பிடிக்க வந்த எமனை, வேலியே பயிரை மேய்ந்தது போல் சிவன் காலால் உதைத்துத் தள்ளிக் கால காலன் என்னும் பெயரைத் தட்டிக் கொண்டார்.

இவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான், உணர்வு இழந்த கூற்று எனக் கம்பர் பாடினார். அந்தோ எமன் அளியன்!

இவ்வாறு புலம்பிய சடாயுவின் நிலையை எண்ணி இராம இலக்குமணர் கண்ணிர் சொரிந்து வருந்தினர்.