பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 89

பின்னர் ஒருவர்க்கு ஒருவர் தத்தம் வரலாறு கூறிக் கொண்டனர்.

மருகி சீதையையும் மைந்தர்கள் இராம இலக்கு மணரையும், கூட்டில் குருவி குஞ்சுகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் கண்ணுக்கு மறையும் வரையும் சடாயு பார்த்துக் கொண்டே இருந்தான்.

இங்கேயே தங்குக என்று அவர்களை வேண்டிக் கொண்டான். நாங்கள் மேற்கொண்டு செல்லவேண்டும் என விடை பெற்றுக் கொண்டு பயணம் தொடங்கினர் மூவரும்.

'வார்ப்பொன் கொங்கை மருகியை மக்களை

ஏர்ப்பச் சிந்தனையிட்டு அவ்வரக்கர்தம் சீர்ப்பைச் சிக்கற்த் தேறினன் சேர்க்கையில் பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான்” (48)

மருகி= சீதை. மக்கள் - இராம இலக்குமணர். இராம இலக்குமணர் சடாயுவைத் தந்தையாகக் கொண்டதால், சீதை சடாயுவுக்கு மருகி (மருமகள்) எனப் பட்டாள். ஆணினும் பெண்ணையே முதன்மையாய்க் காக்க வேண்டு மாதலின் மருகியை முன் கூறினார்.

அரக்கர்களின் இயல்பை நன்கு சடாயு அறிந்து தேறி யிருப்பதால், அரக்கரால் சீதைக்குத் துன்பம் வந்தாலும் வரலாம் என விழிப்புடன் நோக்கினான், ஏர்ப்பச் சிந்தனை யிடல்= விழிப்புடன் நோக்கிக் காத்தல்.

கம்பர் நான்காம் அடியில் சொல் விளையாட்டு செய்துள்ளார். பார்ப்பு= பறவைக் குஞ்சு. பார்ப்பைப் பார்க்கிறதாம் சடாயுப் பறவை. பார்ப்பு-பார்க்கும். என்னும் இரண்டின் அடிச் சொல்லும் பார்' என்பதே. பறவைக் குஞ்சைப் பார்ப்பது பறவைதானே - ஆம் கழுகரசனாகிய சடாயுவும் ஒரு பறவைதானே.