பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர் சண்முகனார் 93

7. தண் என்ற ஒழுக்கம் தழுவல் - குளிர்ச்சியுடன் நீர் நேராகச் செல்லுதல், ஒழுக்கம் என்பதற்குச் செல்லுதல், நற்பண்பு என்னும் பொருள்கள் உண்டு. ஆற்று நீர் நீர்நிலை கள் போல் ஒரே இடத்தில் நிலையாய் நிற்காமல் தடையின்றி ஒடிக்கொண்டே இருக்கும் இதுதான் ஆறு ஒழுக்கம் தழுவுதல் என்பது கவியிலும் பல நல்லொழுக்க நெறிகள் அறிவிக்கப்பட்டிருக்கும். சொற்களை முன் பின்னாக மாற்றிச்சுட்டிப் பொருள் கொள்ளும்படி இல்லாமல், உரை நடைபோல் நேரே தொடர்ந்து செல்லுமாறு சொற்களை எழுதும் அமைப்புக்கு. ஆற்று ஒழுக்கு என்ற பெயர் இலக்கணத்தில் தரப்பட்டிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. (நன்னூல்.19), -

ஆறு இடையறாது தடைபடாது ஒழுகிக்கொண்டு இருக்கும் என்பதைக் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, ஆறு சொல்வதுபோல் மிகவும் சுவையாகப் பாடியுள்ளார்.

“அல்லும் பகலும் அலைந்து வந்தேன் - எங்கள் ஆழி இறைவனைக் காண வந்தேன் நில்லும் எனக்கு இனி நேரமில்லை - இன்னும்

நீண்ட வழிபோக வேண்டும் அம்மா”

(மலரும் மாலையும் - 43 : 8)

என்பது பாடல். மற்றும், டென்னிசன் (Lord Tennyson) என்னும் ஆங்கிலக் கவிஞரும் இவ்வாறு ஆறு சொல்வது போல் அறிவித்துள்ளார்.

“Men may come and men may go;

But I go on for ever” என்பது அவரது பாடல். இதைத்தான் கம்பர் "தண் என்ற ஒழுக்கம் தழுவுதல்’ என்றார். சிலப்பதிகாரத்திலும்,