பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 ) ஆரணிய காண்ட ஆய்வு

'உலகு புரந்தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்

புலவர் காவில் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி’ (13 168-170) என ஆற்றின் ஒழுக்கம் கூறப்பட்டுள்ளது.

அடுத்து, சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி என்பதில் உள்ள கிடந்த என்னும் சொல், கருதத்தக்கது. ஆறு நீளமயாய்த் தெரிவது படுத்துக் கிடப்பது போல் தோன்றுகிறது போலும். இங்கே,

“ஆறு கிடங்தென்ன அகல் நெடுங் தெரு’ (359) என்னும் மதுரைக்காஞ்சி அடியும், மலைபடுகடாம் என்னும் நூலில் உள்ள

"யாறெனக் கிடந்த தெரு' - என்னும் அடியும் ஒப்புநோக்கத்தன.

இவ்வாறு, கம்பர் ஆற்றுக்கும் கவிக்கும் ஒப்பும்ை தெரியும்படி இருபொருள் அமையப்பாடியிருப்பது சுவைக்கத் தக்கதாகும். இவ்வகையான பாடல் அமைப்பு இரு பொருள் (சிலேடை) அணி எனப்படும். - அடிபணிவது

கேர்தாவரி ஆறு, இராம.இலக்குமணர் சீதை ஆகியோரின் திருவடிகளை ஒருபெண் பணிவது , போல் தோன்றிற்றாம். கோதாவரிப் பெண்ணின் முகம் நீரில் உள்ள தாமரைமலர்; கண் குவளை மலர், கை அலை, தாமரையாகிய முகம் மலர்ந்து, குவளையாகிய கண்ணால் நோக்கி, அலையாகிய கையால், நீரில் அடித்து வரும் மலர் களைக் கரையில் இவர்களின் திருவடிகளில் பட ஒதுக்கித் தூவி வழிபடுவது போல் தோற்றம் அளிக்கிறதாம்.

“வண்டுறை கமலச் செல்வி வாள்முகம் பொலிய வாசம் உண்டுறை குவளை ஒண்கண் ஒருங்குற நோக்கிஊழின்