பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஆரணிய காண்ட ஆய்வு

பெண்ணாகிய தண்ணீரில் மிகுதியாக வரும் பூக்களாகிய ஆடையைப் போர்த்துக் கொண்டு கயலாகிய கண்ணால் நோக்கிக் கொண்டு காவிரியாள் நடக்கிறாளாம்.

இளங்கோ கயல் கண் சொன்னார். ஆழ்வார் பாடலில் திரையாகிய கை கூறப்பட்டுள்ளது. காவிரி திரை (அலை) யாகிய கையால் திருமாலின் திருவடிகளை வருடுகிறதாம்:

'தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப்

பள்ளி கொள்ளும் கருமணி' என்பதில், கம்பர் கூறியிருப்பது போலவே திரைக்கை கூறப்பட்டுள்ளமை காணலாம்.

கங்கையைப்போல்-காவிரியைப்போல், கோதாவரியும் தெய்வ (புண்ணிய) ஆறுகளுள் ஒன்றாக நூல்களில் கூறப் பட்டும் மக்களால் போற்றப்பட்டும் திகழ்கிறது. அதனால் தான் கம்பர் கடவுள் யாறு என்றார்.

அழுவதும் ஒத்தது

இராம இலக்குமணர் காட்டில் வதிய வேண்டி வந்ததற்காகக் கோதாவரி வருந்தி, ஐயோ என இரைச்சல் இட்டு ஏங்கிக் குவளையாகிய கண்ணில் பனி சோர அழுவதுபோல் தோன்றிற்றாம்:

"எழுவுறு காதலால் இங்கு இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கிப் - பழுவ நாள் குவளைச் செவ்விக்

கண் பணி பரந்து சோர வழு இலா வாய்மை மைந்தர்

வனத்து உறை வருத்தம் நோக்கி அழுவதும் ஒத்ததால் அவ் அலங்கு

ர்ே ஆறு மன்னோ” (3)