உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திே ஸ்தாபனம் பொறுக்கி எடுத்து, அவர்கள் பெயர்களை ஒரு ஜாபிதாவில் சேர்த்து நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பிவிடவேண்டும். அந்த ஜாபிதாவில் குறிக்கப்பெற்றிருக்கும் பேர்களிலிருந்து நீதிபதிகளே நிர்வாக சபையினர் நியமிக்க வேண்டும். விவில் ஸ்ர்விஸ் உத்தியோகஸ்தர்களைப்போலக் கீழ்த்தர மன்ற நீதிபதிகளையும் போட்டிப் பரீட்சைமூலம் தேர்க் கெடுப்பது மற்ருெரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் திறமைக்குத் தக்கபடியும் உத்தியோக கால அளவின்படியும் அதிகச் சம்பளமும் உயர் பதவியும் கொடுக்க வேண்டும். இம்முறை பிரான்ஸ் தேசத்தில் வழக்கில் இருந்து வருகிறது. இதல்ை திேபதிகள் அறிவும் திறமை, யும் உள்ளவர்களாக இருந்தாலும், நாளடைவில் படிப்படி யாக மேல் பதவியை அடைய விரும்புவோராகையால் நிர்வாக மேலதிகாரிகளின் தயவை எதிர்பார்க்கவேண்டியிருக்கிறது. ஆதலின் அவர்களின் நோக்கமும் மனப்பான்மையும் விரி வின்றிக் குறுகிவிடுகின்றன. - - நீதிபதிகளின் உத்தியோக காலஅளவை நிர்ணயிக்கும் விஷயத்தில் சிறந்த முறை, அவர்கள் திருப்தியாய் வேலே - - - செய்யக்க டிய வரையில் உத்தியோகம் . வகித்து வரும்படி செய்வதே. இதைப் : பலரும் ஒப்புக்கொள்ளுகிறர்கள். வேறு. . . . எந்த முறையிலும் நீதிபதிகளின் சுதந்திர, நிலமையைப் பாதுகாக்க முடியாதென்று பலர். கருதுகிருர் கள். அடிக்கடி மறு தேர்தலையோ, மறு நியமனத்தையோ, உயர் பதவியையோ எதிர்பார்த்துநிற்கும் நீதிபதிகள் பr பாதமின்றித் தீர்ப்பு அளிப்பது அசாதாரணம். சட்டத் 'தைக் கண்டிப்பாய் அனுசரித்துத் தீர்ப்புச் செய்வதை விட் டுப் பொதுஜன விரோதம் அல்லது மேலதிகாரிகளின் விரோ தம் நேராமல் இருக்கும்படியான தீர்ப்பையே அவர்கள் செய்ய நேரிடும். இந்தியாவில் நீதிபதிகளின் உத்தியோக காலம் அவர்களின் வயது அளவைப் பொறுத்து ஏற்பட். டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவர்கள். வேலையிலிருந்து நீங்கிவிட வேண்டும். -- - - - - - 91