பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆரம்ப அரசியல் நூல் காரணம். போலீஸ் படையால் உள்கர்ட்டுப் பாதுகாப்பு, போர்ப் படையால் வெளிகாட்டுப் பாதுகாப்பு ஆகியவை முதலாக உணவுப் பொருள்கள் மருந்து சாமான்கள் என் பவைகளின்மேல் கண்காணிப்பு, தந்தி, தபால், டெலிபோன், ஆஸ்பத்திரிகள், மின்சார வசதி, பொது மக்களின் கல்வி, போக்குவரவுச் சாதனங்கள் முதலியவை வரையில் எல்லாப் பொதுநலக் கருவிகளையும் தன் பிரஜைகளுக்கு எற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை இந்நாள் அரசு ஏற்றுவருகிறது. எல்லா அரசுகளிலும் மேற்கூறிய வசதிகள் காணப்படுமென் பது இல்லை. அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கை யைப் பொறுத்தும் அந்த அந்தக் காலங்களுக்கும் தேசங் களுக்கும் ஏற்றவாறும் இவற்றில் வித்தியாசம் ஏற்பட்டிருக் கின்றது. இம்மாதிரியான விஷயங்களுக்குப் பொது ஊழியம் (Public Service) என்றும் அவைகளில் அமர்ந்திருக்கும் உத்தி யோகஸ்தர்களுக்குப் பொதுஜன ஊழியர்கள் (Public Servants) என்றும் பெயர். அரசுக்கும் பிரஜைகளுக்கும் ஒற்றுமை நிலவக்கூடிய ஜனநாயக அரசில் சர்க்கார் உத்தியோகஸ்தர் கள் உண்மையிலேயே கெளரவம் பெற்ற பொதுஜன ஊழி யர்களே யாவர். இப்போது அநேக அரசுகளில் பொதுஜன அபிப்பிரா யப்படி, ஜனப் பிரதிநிதி சபைகளே அரசின் பொதுக் கொள் - கைகளே கிர்ணயிக்கின்றன. அந்தக் கொள் - லிவில் ஸ்ர்வில் கைகளே நிறைவேற்றுவது கிர்வாக இலாகா : வின் கடமையாகும். இந்த முக்கிய T வேலைக்கு மிகுதியான உத்தியோஸ்தர் களின் கூட்டமும், பலவகைக் காரியாலயங்களும், இலாகாக் களும் அவசியம் வேண்டும். இக்கூட்டத்தில் சேர்ந்த நிரந் தர உத்தியோகஸ்தர்களே உண்மையில் ஆட்சி புரிபவ ரென்று சொல்லலாம். : பார்லிமெண்டுகளும், அரசின் தலைவர்களும் செங்கோல் பிடிக்கலாம்; ஆனால் விவில் ஸ்ர்விஸே ஆட்சி புரிகிறது' என்று சொல்வதில் தவறே. யில்லை. மந்திரிப் பதவியை அடைவது நிர்வாகத் திறமையி ஞல் அன்று. வேறு யோக்கியதை காரணமாக கிர்வாக 96