பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் திக்கே அது ஒரு பெரியூகஷ்டமாகும். சர்க்கார் உத்தியோ கஸ்தன் ஒட்டுக் கொடுக்கும் உரிமையை மட்டும் உபயோ கிக்கலாமேயுன்றி, அரசியல் கூட்டங்களிலோ தேர்தல் போட் டிப் பிரசாரத்திலோ கலந்துகொள்ளக்கூடாது. ------- அத்தியாயம் 14| ஸ்தல ஸ்தாபன ஆட்சி - மத்திய அரசாங்கத்திற்கும் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு அரசியலமைப்பில் ஒரு - முக்கியமான அம்சமாகும். எல்லாத் தேசங் களிலும் ஒழுங்கும் நேர்மையுமுள்ள வாழ்க் கைக்கு மூலாதாரம் ஸ்தல ஸ்தாபன ஆட் 4. சியேயாம். சுய ஆட்சியாயினும் சரி, செங் கோலாட்சியாயினும் சரி, அதன் சிறப்பு ஒரு நாட்டிலுள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள ஆட்சியில் நிலவும் சுயேச்சையின் தன்மையையும் அளவையுமே சார்ந்து நிற் கும். ஸ்தல ஆட்சியில் மற்ருெரு முக்கியமான அம்சம் உண்டு : ஒன்றையொன்று எதிர்த்து கிற்கும் அரசியற்கட்சி களுக்கிடையே சமரலம் ஏற்படுத்திக் கட்சி உணர்ச்சியின் வேகத்தைக் குறைப்பதற்கு அது உதவுகின்றது. ஸ்தல ஸ்தா பன வேலைகளில் ஈடுபடுவதால் பல வகுப்புக்களுக்கும், பல ஜாதியார்களுக்கும், பல மதத்தினருக்கும் இடையே உறவும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவரையொருவர் அடுத்து வசித்து வருவதே ஜனசமூக உணர்ச்சி பலமடைவதற்குப் பெரிய சாதகமாகும். நல்ல தெருக்கள், பாதைகள், தெரு விளக்கு கள், சுகாதாரம், உல்லாசத் தோட்டங்கள் என்பவைபோன்ற பொதுநல வசதிகளில் அடுத்து வாழும் மக்கள் பொதுவில் ஈடுபட்டு ஊக்கத்துடன் உழைத்துவர ஏது இருக்கிறது. இவ், வசதிகளே அநுபவிக்கும் ஜனங்கள் ஒன்றுகூடி ஒத்துழைத் துத் தங்களுக்குத் தேவையான பொதுவசதிகள் பூர்த்தியாவ 100 ஸ்தல ஸ்தாபன ஆட்சியின் முக்கியத்தன்மை