பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்தல ஸ்தாபன ஆட்சி கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுகாதாரப் பிரச்னைக்ள் வர வர அதிக ஊக்கத்துடன் முனிசிபாலிட்டிகளிலும் கிராமப் பஞ்சாயத்துகளிலும் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா வில் இப்போது எல்லா முனிசிபாலிட்டிகளிலும் தனியாகச் சுகாதார இலாகா ஏற்பட்டிருக்கின்றது. அம்மை குத்துதல், காலரா பிளேக்கு முதலிய நோய்களுக்கு ஊசி குத்துதல், உணவுப் பொருள்களைப் பரிசோதனை செய்தல், உணவுப் பொருள்களில் மட்டச் சரக்கைக் கலந்து விற்பனை செய் வதைத் தடுத்தல், பிரஸவ ஆஸ்பத்திரிகளே ஏற்படுத்தல், ஸ்ம் ரகஷண சங்கங்களே நடத்தி வருதல் முதலிய வேலைகளைப் பயிற்சிபெற்ற சுகாதார இலாகா உத்தியோகஸ்தர்கள் கவ னித்து வருகின்றனர். - - -. மேற் சொல்லிய முக்கிய வேலைகளே, கிபுணர்களின் யோசன யில்லாமலும் மத்திய அரசாங்கத்தின் பணஉதவி யின்றியும் ஸ்தல ஸ்தாபனங்கள் நன்ருகச் செய்துவர முடி யாது. வீட்டுவரி, தொழில் வரி, லேசென்ஸ் கட்டணம், தண், னிர் வரி, சாக்கடை வரி முதலியனவும், அவ்வப்போது மத் திய அரசாங்கத்தினிடமிருந்து கிடைக்கும் மானியங்களுமே இந்தியாவிலுள்ள முனிசிபாலிட்டிகளின் முக்கியமான வரு வாயாகும். பஞ்சாயத்து போர்டுகளுக்கும் முன்னே சொல் லிய கடமைகள் உண்டு. ஆனல் அவைகளுக்குத் தக்கபடி வருமானம் இல்லே. . . . . - இக்காலத்து அரசாங்கங்களிலே, ஜர்மனியில் தான் பூர்ண ஸ்தல சுய ஆட்சி பிரஜைகளுக்கு மிகுதியான நலன் களை அளித்திருக்கின்றது. ஜனங்களின் பொது நன்மைக்கான எல்லாவிதமான சமூ. கப் பொருளாதார விஷயங்களேயும் தனிப் - பிரஜைகளின் கல்வித் தேர்ச்சியையும் தன். ஆடைய பொறுப்புகளாகக் கொண்டு தன் வருமானத்தி லிருந்து அவ்விஷயங்களில் செலவு செய்ய ஜர்மன் நகர ஸ்தல - ஸ்தாபனத்திற்கு அதிகாரம் உண்டு. அது தன் இஷ்டப் : படியே பொது கன்மைக்காக எவ்விதமான ஏற்பாடுகளையும் செய்யலாம். பிரஜைகளின் முன்னேற்றத்தின் பொருட்டுப் ஜர்மன் ஸ்தல ஸ்தாபனங், களின் சிறப்பு 105