பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் 1931-ஆம் வருஷத்தில் அரசியூல் சீர்திருத்தங்கள் வந்த தும் ஸ்தல ஸ்தாபன நிர்வாக இலாகாவைச் சட்ட சபை அங்கத்தினர்களிடையே யிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற மந்திரியிடம் ஒப்படைத்தனர். புதிய இந்திய கவர்ன்மெண்டு சட்டத்தின்படி மாகாண சுய ஆட்சி ஏற்பட்டுவிட்டதால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு மத்திய சர்க்காரின் கண்காணிப்பு நிர்ப்பந்தம் இல்லை. ஆனாலும், மாகாண சுய ஆட்சித் திட் டம் எவ்வளவு தூரம் பழைய காலத்துக் கிராம சமுதாய முறைகளைப் புனருத்தாரணம் செய்ய முடியுமென்பது இனி மேல்தான் தெரியவேண்டும். - - அத்தியாயம் 15 பொதுமக்களின் பொறுப்பு பொதுஜன அபிப்பிராயம் . . . . . . . . " அரசாங்கம் பிரஜைகள் கருத்துக்கு இணங்கி ஆட்சி புரிய வேண்டும் என்று வற்புறுத்தும் விஷயத்தில் பொதுஜன அபிப்பிராயம் மிக்க வலிமை பெற்றதாகும். இப்போதுள்ள அரசாங்க நிர்வாகத்தின் பெருமை பொது ஜன அபிப்பிராயம் திரண்டு உருக்கொள் வதைப் பொறுத்துத்தான் இருக்கின்றது. யதேச்சாதிகாரிகளும் சர்வாதிகாரிகளும் பொது ஜன வாக்கை மதிக்காதவர்களைப்போலத் தோன்றலாம். ஆனல் அவர்கள் கூடச் சாமர்த்தியமாகப் பிரசாரம் செய்து பொது மக்களின் பாராட்டையும் ஆதரவையும் பெறத்தான் வேண்டி யிருக்கிறது. ஜனநாயக அரசில், ப்ொதுக் காரியங் களில் முடிவான பொறுப்பைச் சாதாரணப் பிரஜைகளிடம் -- விடுவதலுைம், கிர்வாகக் கொள்கைக்கும் முக்கியமான காரி யங்களுக்கும் பொதுஜன ஆதரவைப் பெறுவதலுைங்தான் தேசீய அமைதியும் நிலைபெற்ற அரசியல் வாழ்வும் ஏற்படக் ம். எனவே, ஒவ்வொரு ஜனநாயக அரசாங்கமும் ப்ொதுஜன அபிப்பிராயம் . í08