பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಎfಹಿತ್ರಣ. - பாட்டிலும், பொருளாதாரத் துறைகளிலும் மகளிருக்குச் சுதந்திரம் இல்லாமையால் அவர்களுக்கு அரசியலில் பிரதி நிதித்துவ உரிமை தேவையில்லையென்ற கருத்து இருந்தது. மகளிருக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமென்ற பொது இயக்கம் ஐரோப்பிய மகா யுத்தத்திற்குப் பின்புதான் வலி பெற்றது. இவ்வியக்கத்தைத் தாக்கி எதிர்த்தவர்கள், உடல் அமைப்பில் பெண்கள் பிரஜைகளின் கடமைகளை, முக்கிய மாய் ராணுவ ஊழியப் ப்ொறுப்பை, நிறைவேற்றும் சக்தி யற்றவர்களென்றும், அதல்ை அவர்கள் பிரஜா உரிமைகள் பெறும் தகுதி இல்லாதவர்களென்றும் கூறினர்; பொது w விஷயங்களில் கலந்து கொள்வதனால் தாய் என்னும் முறை யிலும் குடும்ப நிர்வாகத்திலும் அவர்களுக்குரிய மகத்தான பொறுப்புகளுக்கு ஊறு விளையுமென்றும், மைேபலத்தைக் காட்டிலும் உணர்ச்சியின் சக்தியே அவர்கள் செயல்களுக்குக் காரணமா யிருக்குமென்றும், புதுமை மாறுகிறவரையில் தான் பொது விஷயங்களில் அவர்களுக்குச் சிரத்தை யிருக்கு மெனறும் பலவிதமாக வாதித்தனர். ஆனல் பெண்களுக்கு * வாக்குரிமை அளிக்க வேண்டுமென்பதை மும்முரமாய் வற் புறுத்தியவர்கள், ஒட்டுச் செய்யும் உரிமைக்கு வேண்டிய தகுதி தேக பலத்தை ஒட்டியது அன்று என்றும், புத்தியை யும் கன்னடத்தையுமே பெர்றுத்ததென்றும், நியாயத்தில் ஆண் மக்களைப் போலவே பெண்மக்களும் சம உரிமைகள் பெற வேண்டுமென்றும், ஆலத் தொழில் விஷயத்தில் பெண் டிர்களைப் பாதிக்கும்படியான வகுப்புச் சட்டங்கள் நிறைவே ருமல் இருக்கும்படி கவனித்துவர அவர்களுக்கும் ஒட்டுரிமை அவசியமென்றும், மகளிர் பொது விஷயங்களில் கலந்து கொள்வதால் அரசியலே புனிதமாகுமென்றும், பிரதிநிதித் துவமின்றி வரிகள் விதிக்கக் கூடாது என்ற நியதிக்கு மகளிர் மாத்திரம் விலக்காக இருப்பது சிறிதும் நியாயமன்றென்றும் எதிர்வாதம் செய்தனர். மேற்குறித்த வாதங்கள் சரியோ தப்போ, எப்படி யிருந்த போதிலும் கட்டாயப் பொதுக் கல்வியும் பொருளா தார விஷயங்களில் நாளுக்குநாள் வளர்ந்துவரும் மகளிரின் 115