உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்க்குரிம்ை தியக்காரர்களுக்கும் சாதாரணமாய் ஒட்டுரிமை இல்லை. சில காடுகளில் சில குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பெற்றவர்கள் எப்போதுமே ஒட்டுரிமையை இழந்துவிடுவர். இந்தியாவில் அரசியற் குற்றத்திற்காகத் தண்டனே பெற்றவர்களுக்கு ஒட் டுரிமை இல்லே. இது நியாயமன்று என்று இங்காளில் கருது ஒட்டுக்கொடுப்பதற்கு அறிவுத்திறமை வேண்டுமென்ற கொள்கையை அனுசரித்து, எழுதப்படிக்கத் தெரிந்தவர் களுக்கே ஒட்டுரிமை உண்டு என்று சமீப காலத்தில் சில தேசங்கள் சட்டம் இயற்றி யிருக்கின்றன. ஆனல் அதிக மான கல்வித்திறமை படைத்தவர்கள், அரசியல் விஷயங் களில் ஒன்றும் தெரியாதவர்களாகவும் இருக்கக்கூடும். இதற்கு மாருக, நமது தேசத்திலேயே படிப்பில்லாதவர்களி லும் பலர் அரசியல் விஷயத்தில் புத்தி சாதுரியமும் ஊக்க மும் உள்ளவர்களாக இருக்கிருர்கள். ஆதலின் இந்த யோக் கியாதாம்சம் திருப்தியளிக்கக் கூடியதன்று. இன்னும் சில வெள்ளைக்காரர் தேசங்களில் ஜாதிக் கர்வத்தினல் ஒட்டுரிமை கறுப்பு ஜாதியார்களுக்குக் கொடுக்கப்படவில்லை. பன்மை ஒட்டும் தகுதி ஒட்டும் -ஒவ்வொரு பிரஜைக்கும் ஓர் ஒட்டுவீதம் எண்ணிக் கணக்கிடுவதற்குப் பதிலாகச் சில அரசுகளில் சொத்து, அந்தஸ்து, சர்வகலாசாலைப் பட்டம் முதலிய காரணங்களினல் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஒட்டுகள் அளிக்கும் உரிமை ஏற்பட்டிருக்கிறது. பல வகை யோக்கியதைக்குப் பல ஒட்டு உரிமை ஏற்படுவதால் இம் முறைக்குத் தகுதி ஒட்டு முறையென்றும் பன்மை ஒட்டு முறையென்றும் பெயரிடுவது ஒருவாறு பொருந்தும். தகு தியை நிர்ணயஞ் செய்யத் திருப்திகரமான அளவுகோல் கிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் இம்முறையில் ஏற் றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிடும். ஜனநாயக தத்துவத்தின் அடிப்படையான சமத்துவக் கொள்கைக்கும் நியாயத்திற். கும் இது முற்றும் விரோதமாகும். வயது வந்தவர்கள் எல்லோருக்கும் ஒட்டுரிமை இருக்கும் தேசங்களில்கூட வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுபவர் 117