பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரதிநிதித்துவம் லாம். பிரிட்டனில் இப்படிப் பல தடவைகளில் நேர்ந்திருக் கிறது. ஆகையால் பிரிட்டிஷ் அரசியல் வாதிகளில் பிரமு கர்கள் பலர் இம்முறையைக் கண்டித்திருக்கின்றனர். ஆனல், தேர்தல் முறையைச் சீர்திருத்தி அமைக்கவேண்டிக் கொண்டுவரப்பெற்ற பிரேரணை யாதொன்றும் சட்டசபை யில் நிறைவேறவில்லை. - பிரெஞ்சுத் தேர்தல் முறைக்கு லிஸ்டு முறை அல்லது ஜாபிதா முறை யென்று பெயர். அதன்படி ஒவ்வொரு தேர் தல் தொகுதியும் பத்துப் பிரதிநிதிகளையோ மேற்பட்ட பிரதி நிதிகளையோ கொண்டதாக இருக்கும்படி தேசம் முழுவதும் பிரிக்கப்பட்டுள்ளது. - இவைகள் பல அங்கத்தினர்களைக் கொண்ட தொகுதிகள் என்று சொல்லலாம். ஒவ்வோர் அரசியற் கட் சியும் எத்தனே தேர்தல் ஸ்தானங்கள் உண்டோ, அத்தனை அபேட்சகர்களின், பெயர்களை ஒரு ஜாபிதாவில் சேர்த்து வெளியிடும். வாக்காளர்கள் ஒரு ஜாபிதா முழுவதற்குமே ஒட்டுச் செய்யவேண்டும். பெரும்பான்மை ஒட்டுகளைப் பெறும் கட்சிக்கு எல்லா ஸ்தானங்களும் உரியனவாகும். பிரிட்டிஷ் முறையைவிடப் பிரெஞ்சு முறை விஷயத்தில் அதிக ஆட்சேபம் இருக்கிறது. பல தடவைகளில் பரீட்சை செய்து கடைசியில் பிரான்ஸ் தேசமே இம்முறையை கிரா - கரித்துவிட்டது. . . . ஜர்மன் பிரதிநிதித்துவ முறைக்கு விகிதாசார ஜாபிதா முறை என்று பெயர். அதன்படி தேசத்தைப் பல பெரிய தேர்தல் தொகுதிகளாக பிரித்திருக்கிருர்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் அறுவர் முதல் பதின்மர்வரையில் பிரதிநிதிகள் உண்டு. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு - காளர்கள் கட்சிகளின் ஜாபிதர்க்களில் ஏதாவது ஒன்றுக்கு ஒட்டுச் செய்யலாம். தேர்தலில் ஒரு கட்சி பெறும் ஒட்டுகளின் தொகையைப் பொறுத்து விகிதாசாரப்படி அக்கட்சியினரின் பிரதிநிதிகள் பிரெஞ்சு லிஸ்டு முறை ஒன்றைத் தயாரித்து வெளியிடும். வாக்