பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்யூமுலேட்டிவ் அல்லது குவியல் ஒட்டுமுறை:-எத்தன. ஸ்தானங்கள் உண்டோ அத்தனை ஒட்டுகளையுடைய ஒரு வாக்காளர், ஒரே அபேட்சகருக்குத் தமக்குரிய எல்லா ஒட்டு: களையும் கொடுத்து விடலாம். உதாரணமாக நான்கு ஸ்தானங்கள் தேர்த்லுக்கு விடப்பட்டால் ஒரு வாக்காள ருக்கு நான்கு ஒட்டுகள் உண்டு. அவர் தம் நான்கு ஒட்டு. களையும் தம் இஷ்டப்படி ஒரே அபேட்சகருக்கோ, அல்லது. பிரித்து வெவ்வேறு அபேட்சகருக்கோ கொடுக்கக் கூடும். ஒரு சிறுபான்மை வகுப்பினர்க்குள் ஐக்கிய பாவமும் மன உறுதியும் இருந்தால் அவர்கள் நிச்சயமாக இம்முறையால் பிரதிநிதித்துவம் பெற்றுவிடலாம். ஆனல் லிமிட்டெட் க்யூ முலேட்டிவ் ஆகிய இரண்டு முறைகளிலும் சூழ்ச்சிகளுக்கும், நேர்மையான கோக்கமும் லகதியமும் இல்லாத செயல்களுக் கும் இடிம் தாராளமாக ஏற்படுகின்றது. மாற்று ஒட்டு-பிரிட்டிஷ் பிரதிநிதித் தேர்தல் முறையில் அனுபவத்தில் காணப்படும் குறைகளை விலக்கவே இம்முறை. உபயோகப்படுகிறது. இதன்படி ஒரு வாக்காளர் ஒட்டுச் சீட்டில் குறிக்கப் பெற்றிருக்கும் அபேட்சகர்களில் இருவர். அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்களுக்கு எதிராகத் தம் இஷ்டத்தைத் தெரிவிக்குமாறு 1, 2, 3, 4 என்று குறிக்க வேண்டும். முதல் ஒட்டுக்கணக்கில் யாதோர் அபேட்சகருக் கும் பாதிக்கு மேற்பட்ட முதல் ஒட்டுத் தொகை கிடைக்கா விட்டால், அந்த அந்த அபேட்சகருக்கு எதிராக 3 என்று. குறிக்கப்பெற்ற சீட்டுகளும், முதல் ஒட்டுகளுடன் சேர்த்துக் கணக்கிடப்படும். பாதிக்குமேல் ஒட்டுகள் ஒருவருக்குக் கிடைக்கிற வரையில் இவ்வித ஒட்டு மாற்றுதல் கடை இதை விளக்கிக் காட்டுவோம்: -- செங்கற்பட்டு ஜில்லாவுக்கு ஒரே பிரதிநிதியைத் தேர்ங் தெடுக்கும் உரிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கு நான்கு அபேட்சகர்கள் நிற்கின்றனர். ஜில்லாவி, லுள்ள வாக்காளர்களின் தொகை 10,000 என்று கொள் வோம். அபேட்சகர்களுள் ஒருவர் வெற்றிபெறக் குறைந்த