பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரம்ப அரசியல் நூல் வேண்டும் என்று அரசியலோடும் அறவியலோடும் பொருந்தச்செய்யும் விமரிசனம் ஆகிய இவைகள் சேர்ந்ததே அரசியல் நூலாகும். அரசையும் அதன் விஷயங்களையும் பற்றியும் முதல் முதலாகச் சிந்தித்தவர்கள் கீழைத் தேச மக்களே. ஆனால், அவர்கள் தாம் ஆலோசித்துணர்ந்த முடிவுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவில்லை. அன்றியும், அரசியலையும் மதத்தையும் அவர்கள் ஒன்றோடொன்று கலந்தார்கள். தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள கிரேக்கர்களே அரசியல் நூலைத் தனியாகவும் ஒழுங்காகவும் அபிவிருத்தி செய்தார்கள், மதம், மூட நம்பிக்கை, புராணக் கொள்கை முதலியவற்றிலிருந்து அதனை வேறு பிரித்தார்கள். பிற்காலத்தில் அரசியல் வளர்ச்சி வரவர விரிவடைந்தது. இக்கால்த்திலோ, தினந்தோறும் ஏதாவது ஒர் அரசியற் சிக்கலைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்; உடனே நிவர்த்தி செய்யவேண்டிய விஷயமாயிருக்கும் அது நம் நாட்டில் ஜனங்களிடத்தில் விசேஷமான அரசியல் விழிப்பு ஏற்பட்டுள்ளது; அரசியல் பிரச்னைகளில் யாவருக்கும் சிரத்தை உண்டாகியிருக்கிறது. இதனால், இளைஞர்களுக்கும் அரசியல் எழுத்தாளருக்கும் முறையான அரசியல் சாஸ்திர ஆராய்ச்சி அவசியம் என்ற நிலை வந்திருக்கிறது. மனிதர்கள் அமைத்துக்கொண்ட சங்கங்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது அரசு. ஆதிகால மனிதர்கள் முதல்முதலாக ஏதோ ஒர் அரசியல் அமைப்பைக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? அது எத்தகைய சந்தர்ப்பங்களில் உண்டாயிற்று, என்ன நிலைகளில் பிறந்தது என்பதைச் சரியாகத் தெரிவிப்பதற்குரிய ஆதாரங்கள் சரித்திரத்தில் காணப்படவில்லை. சரித்திரக் குறிப்புக்கள் கிடைக்கும் காலத்திற்கு முன்பே, ஆதி மனித இனம் வளர்ந்து வந்த காலத்திலேயே ஆதி அரசியல் வாழ்க்கை தோன்றிவிட்டது என்பதுதான் இதற்குக் காரணம். ஆகவே ஆதாரபூர்வமான சரித்திரம் இந்த விஷயத்தில் ஒரு தெளிவையும் உண்டாக்கவில்லை. சமூக சாஸ்