பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் பட்சம் 5001 ஒட்டுகள் பெற வேண்டும். வாக்காளர்கள் நான்கு அபேட்சகர்களுக்குள் ஒருவருக்கு மட்டும் சீட்டில் x என்னும் குறியிட்டு ஒட்டுக் கொடுத்து கின்று விடுவதற்குப் பதிலாக, தமக்கு அதிக விருப்பமுள்ள ஒருவருக்குத் தம் ஒட்டை முதலாவதாகவும், அவருக்கு அடுத்தபடியாக விருப்ப முள்ள ஒருவருக்கு இரண்டாவதாகவும் கொடுத்து விட வேண்டும். இப்படியே படிப்படியாகத் தங்கள் குறிப்பைத் தெரிவிக்க வேண்டும். - - ". . . . . . . . . உதாரணம்: - - வாக்காளர்களின் அபேட்சகர் பெயர் இஷ்டத்தைக் - . . குறிக்கும் எண் பழனி செட்டியார் . . . . . - - - 2 முத்துசாமி முதலியார் ... ... 4 ராஜூ பிள்ளை • * * * ... 1 வேங்கடராம ஐயர் - 3 இப்படி ஒட்டுச் சீட்டில் குறிப்பதாக வைத்துக் கொள் வோம். ஒவ்வோர் அபேட்சகருக்கும் 1 என்ற எண் இடப் பட்ட ஒட்டுகள் எவ்வளவு கிடைத்திருக்கின்றன என்று முத லில் கணக்கிடுவார்கள். யாருக்காவது 5001 முதல் ஒட்டுகள் 1 என்ற குறிப்போடு இருந்தால் அவரே தேர்ந்தெடுக்கப் பெறுவர். அப்படி ஒருவருக்கும் இல்லாவிட்டால் 1 என்ற எண்ணிக்கையை மிகக் குறைவாகப்பெற்ற அபேட்சகரை நீக்கிவிட்டு, அவர் அப்படிப் பெற்றுள்ள சீட்டுகளில் யார் யாருக்கு இரண்டாவது ஸ்தானம் கிடைத்திருக்கிறதோ அவற்றை முதல் ஸ்தானமாக வைத்து அவரவர்கள் சீட்டுக் கணக்கோடு சேர்த்து விடுவார்கள். இப்படி மாற்றிப் பார்க் கும்போது யாருக்கு 5001 ஒட்டுகள் கிடைக்கின்றனவோ அவர் வெற்றி பெறுவார். இந்தத் தடவையும் கிடைக்கா விட்டால் மீட்டும் ஒருவரை விலக்கி எனைய இருவருக்கு அவர் ஒட்டுப் பலத்தை மாற்றிக் கணக்குப்பார்ப்பார்கள். 128