உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் களில் போதிய அறிவில்லாமலும் ஊக்கமின்றியும் இருப்ப தால், அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி உண்டுபண்ணி அர சியற் பிரச்னைகளை விளக்கிக் காட்டிப் பின்னிருந்து உதவி யும் தூண்டுதலும் செய்துவருவதே அரசியற் கட்சிகளின் முக்கியமான செயலாகும். பிரஜைகளின் அபிப்பிராயங் களையும் குறைகளையும் வெளியிட்டுத் தக்க பரிகாரங்களைத் தேடி அமைத்துக்கொள்ளும் விஷயங்களிலும் அரசியற் கட்சிகள் மிகவும் உபயோகமுள்ளவை. ஆகவே, ஜனநாயக அரசில் பொதுமக்களின் அதிகாரத்தைச் செலுத்துவதில் அரசியற் கட்சிகளுக்குத்தான் ஒரு பெரிய பங்கு இருந்து வருகிறது. கட்சிகள் பொதுஜன அபிப்பிராயத்தைத் திரட் டுவதற்கேற்ற சக்தி வாய்ந்தவையாயிருப்பதன்றிச் சில நாடு களின் பரந்த பிரதேசங்களில் ஜனநாயக ஆட்சி நடைபெறு வதற்கு அவசியமான ஐக்கிய பாவத்தை உண்டுபண்ணக் கூடியவையாயும் இருக்கின்றன. - கட்சிப் பிரிவுகள் இயற்கையான மனப்பான்மையின் பேதங்களே ஒருவாறு வெளிப்படுத்துகின்றன. கன்ஸெர் வெட்டிவ் அல்லது பொதுவாகச் சமூக வேறுபாட்டை விரும் பாத கட்சி, லிபரல் அல்லது சீர்திருத்தக் கட்சி என்னும் பிரிவு இயற்கையில் உண்டாகும் அபிப் ు తో பிராய வித்தியாசத்தைப் பொறுத்த பிரி ற வாகும். தேர்தல் வேண்டாத கட்சியி UT6്ഞഖ - - , * லேயே மிதவாதிகளும் தீவிரவாதிகளும் உண்டு. அவ்வாறே லிபரல் கட்சியினரும் தீவிர லிபரல் என் றும் மிதவாத லிபரல் என்றும் இருவகைப்படுகிருர்கள். - இரண்டு அல்லது மூன்று கட்சிகள் இருந்தால், அக் கட்சிகள் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் ஏற்படும். ஐரோப் - கிளக் கட்சிகள் பிய உள் ®ಹೂವು அநேகமாக உட்பிரிவு . . . . . . . . . . களே தனிக் கட்சிகளாக அமைந்திருக்கின் றன. ஆனல், இவைகளுக்குப் பலமும் செல்வாக்கும் மிகக் குறைவாகவே உள்ள்ன. ஆதலால் நெருக்கடிச் சமயங் களில் சில உட்பிரிவுகள் தமக்குள் கட்டுப்பாடு செய்து கொண்டு எதிர்க் கட்சிகளுடன் போர்புரியும்படி நேரிடு. 132