பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் நாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்பனவாம். ஆல்ை, அவை களுக்குள் அரசியற் கொள்கைகளைப் பற்றியோ அல்லது வேறு பிரச்னேகளைப் பற்றியோ உண்மையான வித்தியாசம் ஒன்றும் காணப்படுவதில்லை. கட்சிச் சண்டையெல்லாம் அரசியல் கிர்வாகக் கருவியைக் கைப்பற்ற வேண்டியதற்காக வும் உத்தியோக வேட்டைக்காகவுந்தான். நமது பாரத தேசமோ கொஞ்சகாலமாக மேல்நாட்டு ஜனநாயக ஆட்சி, முறைகளைத் தழுவி வருகின்றது. அரசியற் கட்சிகளும் மேல்நாட்டு முறைப்படியே ஒருவாறு அமைந்திருக்கின்றன. கட்சி ஏற்பாட்டில் பல குறைகள் உண்டென்ருலும், நம் காட்டில் உண்மையான ஜனங்ாயக ஆட்சி திறமையாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற வேண்டுமானல், நாமும் கட்சி களைத் திருப்தியான முறையில் அமைத்து அவைகளையே அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்திவர வேண்டும். பிரிட்டன், பிரான்ஸ் முதலிய தேசங்களில் சட்டசபை நடவடிக்கைகளில் கட்சி ஆட்சி ஒரு விசேஷ அம்சமாகும். - ೬ಹfಷ . சட்டசபைகளில் 56ುಗಿಲಹGa ... " மற்றத் ഖോ கட்சிகளின் உதவிகொண்டோ பெரும்பான் . .. மைப் பலத்தைப் பெற்ற கட்சிதான் அர சியல் அதிகாரம் முழுவதையும் வகித்துவரும். எதிர்க் கட்சி. கள் அவ்வதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிச் சட்டசபை களிலும், வெளியே தேர்தல் தொகுதிகளிலும் அரசாங்கக் கட்சிக்கு விரோதமாகப் பலத்த பிரசாரம் செய்து அதை' அதிகாரப் பதவியிலிருந்து விரட்டிவிட முயற்சி செய்து கொண்டே இருக்கும். இப்பிரசாரச் சண்டையின் பலகை எதிர்க் கட்சி மிக்க ஆதரவைப் பெறுமாகில் அதுவரையில் அதிகாரம் வகித்துவந்த கட்சியை வெளியேற்றிவிட்டுத் தானே அப்பதவியைக் கைப்பற்றும். ஓர் அரசியற் கட்சி அதிகாரப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் அங்கத்தினர்களை ஒன்றுசேர்த் தும், அதன் கொள்கைகளைப் பற்றியும் காரியத் திட்டங் களைப் பற்றியும் பொது மக்களிடையே இடைவிடாது பிர, சாரம் செய்தும் வரவேண்டும். அப்போதுதான் பொது 134