அரசியற் கட்சிகள் மக்களுக்கு அரசியல் விஷயங்களிலும் கட்சி ஏற்பாட்டிலும் அக்கரை இருக்கும். மேலும், தேர்தல்களில் அபேட்சகர் களப் பொறுக்கி நிறுத்துவதிலும் தேர்தல்களைச் சரிவர நடத்துவதிலும் முக்கியமான பொறுப்பு, கட்சிகளுக்குத் தான் உரியது. இப்பொறுப்பினால் உண்டாகும். சலுகை யின் காரணமாகக் கட்சிகள் அரசியல் திட்டத்தில் குறிக்கப் பெருத ஒரு முக்கிய அரசியல் உறுப்பாக அமைந்துள்ளன. மகத்தான பிரச்னைகள் ஏற்படும்போது அபிப்பிராய பேதங் களே விளக்கிக்காட்டியும், பொதுமக்கள் அப்பிரச்னைகளின் குணதோஷங்களே நன்கு அறிந்து தேர்தலில் கலந்துகொள் ளும்படி கட்சிகள் உதவி செய்தும் வருகின்றன. அரசியற் கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கும் பொது மக்களின் ஆதரவு அவைகளுக்கு ஏற்படும் வண்ணம் நாடு முழுவதும் பிரசாரம் நடைபெறுவதற்கும் கட்சி ஸ்தாபனங்கள்ே முக் கியமான சாதனங்களாக இருக்கின்றன. இங்ங்னமாக ஜனநாயக அரசின் லகூதியங்கள் கைகூடு வதற்கு அரசியற் கட்சித் திட்டம் மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. சுருக்கமாகக் கூறுவோமானல், இப்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சியின் வெற்றி பெரும்பான்மையும் கட்சித் திட்டத்தின் வலிமையையும் திறமையையும் ஊக்கத்தையும் பொறுத் திருக்கிறது என்றே சொல்லவேண்டும். கட்சி ஆட்சி முறையினல் பல பெரிய கெடுதல்கள் விளைகின்றன. கட்சிக் கட்டுப்பாடுகளினல் பொதுமக்கள். கட்சித் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் தீர்ம்ானத் . . . . . தின்படியே பல விஷயங்களில் நடக்க - கட்சி | வேண்டி யிருக்கிறது. ஆகையால் ஜன நாயக ஆட்சியின் அபிவிருத்திக்கு அவசிய மாகக் கருதப்படும் சுயேச்சை பொதுமக்க ளுக்கு இல்லாமலே போய்விடுகிறது. மேலும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அபிப்பிராய பேதம் இருக்கவிடுவதில்லை. அங்கத்தினர்களுக்குள் உண்மையான சுதந்திரம் இராது. ஒவ்வொரு கட்சியும் சில தலைவர்களின் குழ்ச்சிக்கு உட்
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/147
Appearance