ஆம்ப அரசியல் துல் அரசியல் விஷயஞானமும் உயர்வான பிரஜா நோக்கங்களும் ஏற்பட்டு வளர்ந்து வந்தால் மாத்திரமே கட்சி ஆட்சியின் தீமைகள் ஒருவாறு குறைவுபடும். - இரு கட்சி முறை” யில்ைதான் பொறுப்பு வாய்ந்த ஜனநாயக அரசாங்கம் வளர்ந்து ஓங்கி ஆட்சி புரியக் கூடு மென்பது வெகுநாளாக ஒப்புக்கொள்ளப்பட்ட அரசியற் கொள்கைகளுள் ஒன்ருகும். இந்த முறை இநகட்சி , யினல் வாக்காளர்கள், ! போட்டியிடும் r 蠶 இரண்டு கட்சிகளின் லஜியங்களையும் தீமைகள். காரியத் திட்டங்களையும் அறிந்துகொண்டு . ஒருவிதத் தீர்மானத்திற்குச் சுலபமாக வரக் கூடும். வாக்குறுதிகளைப் புறக்கணித்த கட்சியை மறு தேர்தல் காலத்தில் பிரஜைகள் கண்டிக்கக்கூடும். அரசியற் காரியங்களில் ஏற்படும் தவறுகளுக்காக அரசாங்கப் பொறுப்பை வகித்துவரும் கட்சியை எளிதிற் கண்டிப்பதற் கும் இடம் ஏற்படும். பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட கட்சியைப் பதவியிலிருந்து நீக்கி அரசாங்க அதிகாரத்தைத் தாமதமின்றியும் எவ்வித முரண்பாடின்றி யும். எதிர்க்கட்சியினர் கைப்பற்றி நடத்துவது இம்முறை யினல்தான் எளிதில் சாத்தியமாகிறது. ஆளுல் இந்நாள் அரசுகளில் ஏற்படும் பலவிதமான அரசியற் பிரச்னைகளைப்பற்றிய அபிப்பிராயங்கள் எல்லா . . வற்றையும் இரண்டு. கட்சிகளின் அபிப் :-" பிராய்ங்க்ளாக மாக்கிரம் a - -- ), பிாங்களாக மாத்திரம் வகுத்துவிடுவது சாத்தியமான விஷயம் அன்று. ஒவ்வொரு பிரச்னையைப் பற்றியும் பலதிறப்பட்ட அபிப்பிராயங்கள் உண்டாகலாம். அவை இரண்டு கட்சிகளுக்குள் அடங்கா. இவ்வாறு பிரச்னைகளும் அபிப்பிராய பேதங்களும் அதிகம் ஆக ஆகக் கட்சிகளும் கோஷ்டிகளும் அதிகரிக்கும். இக் காரணத்தினுல்தான் அநேக தேசங்களில் பல அரசியற் கட்சிகள் தோன்றி, அரசியல் வியவகாரங்களில் தலையிட்டு வருகின்றன. கட்சிகளுக்குள் வீண் போட்டியும் சண்டை யும் சச்சரவும் ஏற்பட்டுப் பொதுமக்களின் அபிவிருத்தி 138
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/150
Appearance