தடைப்பட்டு விடுகிறது. சில சமயங்களில் கட்சிகளுக்குள் இரகசியமான ஒப்பந்தங்களும் நடைபெறுகின்றன. அவை களின் பலகைச் சில அரசியற் கட்சிகள் கூடிச்சேர்ந்து அரசாங்கப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகின்றன. ஆனல் அவைகள் தேர்தல் காலங்களில் வெளியிட்ட உறுதி மொழி களின்படியோ அறிக்கைகளின்படியோ நடக்கக்கூடாத நிலைமையில் இருக்க வேண்டி நேர்கின்றன. ஏனெனில், அரசுபுரிவதற்கு மற்றக் கட்சிகளின் ஆதரவு வேண்டியிருப்ப தால், எந்தக் கட்சியும் தன் கொள்கைகளையும் காரியத் திட்டங்களேயும் வாக்களித்தபடி நிறைவேற்ற முடிவதில்லை. இம்முறையில் அரசியலில் ஏற்படும் தவறுகளுக்குப் பொறுப்பு யாருடையது என்று நிர்ணயிப்பது பொது மக்களுக்கு இயலாத காரியமாகிறது. - o மேற்சொல்லிய கெடுதல்களெல்லாம் பிரான்ஸ் தேசத்து அரசியல் நிர்வாக முறையில் தெளிவாகக் காணப்படுகின் றன. அங்கே நடைமுறையில் இருந்துவரும் கூட்டுக் கட்சித் திட்டம் பல விதங்களில் அதிருப்தியை உண்டு பண்ணி யிருக்கிறது. சாதாரணமாக ஒரு மந்திரி சபை சராசரி பதினெரு மாதங்களுக்கு மேல் டிேத்திருந்ததில்லை. ஏனெனில் நிர்வாக விஷயங்களிலும் சட்ட நிர்மாண விஷயத் திலும் பிரெஞ்சு மந்திரிசபை பல சிறு கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து கிற்க வேண்டியிருக்கிறது. சிநேகமா யிருந்த ஒன்று இரண்டு கட்சிகள் எந்தக் காரணத்திலைாவது மந்திரி சபையின் அபிப்பிராயத்திற்கு விரோதமாகப் போய். விட்டால் அரசியல் நிர்வாகம் நடைபெற முடியாது. உடனே சட்ட சபையில் தக்க ஆதரவு பெறவேண்டி, முன்னிருந்த மந்திரி சபை, கலைக்கப்பட்டு, மறுபடியும் கட்சி, பேரங்கள் நடைபெற்றுப் புதிதாக மந்திரி சபை யொன்று அமைக்கப் பெறும். இதல்ை அரசியல் நிர்வாகத்தின் கிலேயான தன்மையே குறைந்து போகின்றது; பொறுப் போட்சியும் நிலைபெறுவதில்லை. சூழ்ச்சிகளுக்கும் தந்திரங் களுக்கும் இடம் ஏற்படுகிறது. இவைகளை யெல்லாம் நாம் கவனித்துப் பார்க்கையில், இரு கட்சித் திட்டமே அதிகத் 139