பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் திருப்தியை அளிக்கக் கூடியது என்ற முடிவுக்கு வரவேண்டி யிருக்கிறது. - - - சமீப காலத்தில் மற்ருெரு கட்சி முறையும் ஏற்பட்டு கடந்து வருகிறது. இதனை ஒற்றைக் கட்சி முறை” என்று ம்ைமைக் கட்சி சொல்லலாம். ஸோவியத் ருஷ்யாவில் 9ుణ్ణ '" போல்ஷவிக் என்னும் கோஷ்டியினரும் முறை இத்தாலியில் பாஸிஸ்டு என்ற பெயர் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்களும், ஜர்மனி தேசத்தில் நாளி களும் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஆதரிப் பவர்கள். கட்சித் தலைவர் பதவியும் அரசின் சர்வாதிகார மும் ஒருவரிடத்தில் கூடியிருப்பதே இம்முறையின் சிறப் பியல்பாகும். சர்வாதிகாரியின் லகதியங்களும் காரியக் கிரமமும் பொதுமக்களின் அபிப்பிராயத்திற்கும் அபிவிருத் திக்கும் ஏற்றவாறு இருக்குமாயின் இம்முறையினல் ஏற் படும் கன்மைகள் மற்ற எந்த முறையினாலும் கைகூடுவன அல்ல. ஆனல் இம்மாதிரியான ஐக்கியமும் ஒற்றுமையும் ஒரு தேசத்தில் ஏற்பட்டாலும் அவை கொஞ்சகாலமே நிலைபெறும். அபிப்பிராயபேதங்கள் உண்டானல் உடனே சர்வாதிகாரி தன் முழுப் பலத்தையும் கொண்டு அவற்றை அடக்கிவிட முயலுகிருன் வாக்குச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் முதலிய உரிமைகள் யாவும் பறந்து போகின்றன. சர்வாதிகாரியின் அபிப்பிராயமே பொதுமக்களின் அபிப் பிராயமாக மதிக்கும்படி அவன் செய்து வருகிருன். இம்முறை நீண்ட காலம் நடைபெறும் என்று நினைப் பது தவருகும். அபிப்பிராய பேதங்களே முற்றும் அழித்து விட முடியாது. சர்வாதிகாரியின் பலமும் செல்வாக்கும் வரவரக் குன்றுமே யொழிய வளருவதற்குச் சாத்தியம் இல்லே. நெருக்கடி ஏற்பட்டு அரசியல் கிர்வாகம் தடைப் பட்டுப் போனல் அரசே அதோடு சீர்குலேந்து போகும்.