பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் பது பைத்தியம் பிடித்தவன் செயலாய்த்தான் முடியும். கொஞ்ச காலமாக ராஜதந்திர நிபுணர்களும், அரசியல் அறிஞர்களும் உலக வழக்குகளைச் சமாதான முறையிலும் சிநேக பாவத்திலும் தீர்த்து வைக்கப் பலவகை முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றனர். எல்லாத் தேசிய அரசுகளின் ஒத்துழைப்பையும் கூட் டுறவையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பெற்றுள்ள உலக அரசியல் ஸ்தாபனங்களில் மிகவும் பேர் போனதும் நடைமுறையில் இருந்து வருவதுமான ஸ்தா பனம் சர்வதேச சங்கம் என்பதே. தனி - அரசுகள் எல்லாவற்ற்ையும் உடன்படிக்கை களின் மூலம் ஒருவாறு கட்டுப்படுத்தி, சர்வதேச ஒற்று மையை ஏற்படுத்துவதுதான் இதன்நோக்கம். 1918-ஆம் வருஷம் மகாயுத்தம் முடிந்து பல உடன்படிக்கைகள் கிறை வேறுகையில் இச்சங்கத்தின் அமைப்பும் நிர்ணயிக்கப் பெற் றுச் சமாதான உடன்படிக்கைகளின் ஒரு பகுதியாகச் சேர்க் கப் பெற்றது. சர்வதேச சங்கத்தின் ஒப்பந்தத்தில் முதல் முதல் கையெழுத்து இட்டகாடுகள் முப்பத்திரண்டு. ஜர்மனி தேசத்தைத் தவிர மற்ற எல்லாத் தேசங்களும் அதில் சேரக் கூடும். 1926-ஆம் வருஷத்தில் ஜர்மனியும் சேர்ந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. சுதந்திரம்பெற்ற டொமினி யன்களும், குடியேற்ற நாடுகளுங்கூட அதன் அங்கங்கள் ஆயின. சங்கத்தில் சேர விரும்பும் அரசுகள் மனுச் செய்து கொள்ள வேண்டும். மனுத்தேதியில் சங்கத்திலுள்ள அங் கத்தினர்களில் 塔 மூன்றில் இரண்டு பங்கு அரசுகள் அம். மனுவை அங்கீகரித்தால் மேற்படி அரசுகள் பூர்ண் அங்கங்க ளாகக் கருதப்படும். இப்போது சுமார் அறுபது நாடுகள் சர்வதேச சங்கத்தில் சேர்ந்திருக்கின்றன. ೩.೧5 ஜனத் தொகையில் முக்கால் பாகமுள்ள அரசுகள் சர்வதேச சங்கத் தில் சேர்ந்திருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள்'முதலி லிருந்தே சேரவில்லை. சமீபகாலத்தில் ஜப்பான், இத்தாலி, முதலிய வல்லரசுகள் இந்தச் சர்வதேச சங்கம் ஜர்மனி, ஸோவியத் ருஷ்யா சங்கத்திலிருந்து விலகிவிட்ட