பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் துல் களில் அது யாதொன்றும் செய்ய முடியாமற் போனதால் அதனிடம் இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. உலக அரசு ஸ்தாபனம்' என்று கருதுவதற்குத் தக்க சக்தி அதற்கு ஏற்படவில்லை. தரைப்படை, கடற்படை, போலிஸ்படை ஒன்றும் அதற்கு இல்லை. ஆதிபத்தியத்திற்கு வேண்டிய அதிகாரமும் அதனிடம் இல்லை. இவ்விதக் குறைகளினல் சர்வ தேச சங்கம் மறைந்துவிடுமா, இப்போது நடக்கும் யுத்தத்திற்குப் பிறகு புனருத்தாரணம் பெறுமா என்பது இனித் தெரியவேண்டிய விஷயமாகும். எல்லோரும் ஒரு குலம்’ என்ற எண்ணத்தில் நம்பிக்கையுடையவர்கள் குறு கிய தேசியக் கொள்கைகளையும் பரஸ்பர அவநம்பிக்கைகளே யும் தவிர்த்து இப்பொழுதுமுதல் கூட்டுறவு கொண்டு உழைத்தார்களானல் அடுத்த தலைமுறையிலாவது உலக சமஷ்டி தோன்றலாம். - - குறுகிய மனப்பான்மையும், குறுகிய நோக்கமும் கொண்டவன், இவன் என் தேசத்தான், அவன் வேறு நாட்டான் என்று எண்ணு , கிருன். ஆனல் உத்தம உள்ளம் படைத்தவன் 'உலகமே என் தேசம்’ என்று கருதுகிருன் - -