பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் உற்பத்தி கப்பட்டுப் பாதுகாக்கப் பெறுவது என்று நம்பினர். கிரேக் கர்களும் ரோமர்களும் அரசு கடவுளின் மறைமுகமான சிருஷ்டியென்று கருதினர்கள். இந்தக் கொள்கை நவீன காலம் வரையிலுங்கூட இருந்து வந்தது. மத்திய காலத்தி லும் அதைத் தொடர்ந்த பிற்காலத்திலும் அரசர்களின் தெய்விக உரிமைக்கு ஆதரவாக இக்கொள்கை பயன்பட்டு வந்தது. இப்பொழுதோ இதை மதிப்பார் இல்லை. எனினும் சில. விஷயங்களில் இது மதித்தற்குரியது. ஒரு விஷயம் வருமாறு : மக்கள் நாகரிகம் முதிர்ந்தும் முதிராமலும் இருந்த ஒரு காலத்தில், ஓர் அதிகாரத்துக்கேனும் தாமாக வரை யறுத்த சட்டத்துக்கேனும் பணியும் வழக்கமே அறியாத நிலையில், தெய்வ சிருஷ்டிக் கொள்கையானது ஒழுங்கை நிலை நிறுத்துவதற்குச் சக்தியுள்ள கருவியாக இருந்திருக்க வேண் டும். குழப்பம் ஏற்படாமல் பாதுகாத்து உடல், பொருள், அரசாங்கம் என்பவற்றின்பால் உள்ள மரியாதை பலப்படு வதற்கு மிக உதவியது. . மற்ருெரு விஷயம் வருமாறு: ஆளப்படும் குடிமக்களின் நன்மைக்காகவே அரசாங்கம் இருக்கிறது.என்ற உண்மையை அது வற்புறுத்துகிறது. வரையறையற்ற அதிகாரம்பெற்ற அரசனுக இருந்தாலும் தன் அதிகாரத்தைச் செலுத்தும் விஷயத்தில் தெய்வத்துக்குப் பயந்து அறத்தோடு பொருந்த ஒழுக வேண்டும். இவ்விரண்டு விஷயங்களோடு மிக முக்கிய ம்ான மற்ருென்று உண்டு. அரசியலில் ஒழுங்கு அமைய வேண்டியது தர்மமென்பதை அது குறிப்பாக வற்புறுத்து கிறது. இந்தச் செய்தி எல்லாவற்றிலும் உயர்ந்த மதிப் புடையது. வலிமைக்கொள்கை யென்பது வல்லார் வகுத்ததே அர சென்று கூறுவது. பலமில்லாதவர்களே வலிமையுள்ளவர் கள் அடக்கி ஆள்வதல்ை உண்டானது அர சியல் ஸ்தாபனம் என்பது இக்கொள்கை. மக்களே அடக்கி ஆள்வதன் விளைவே அர சாங்கம். மனிதன் மனிதன அடிமைப்படுத்தும் வழக்கத்தி லுைம், வலியற்ற குழுவினரை வலியுள்ளோர். வென்று 2. வலிமைக் கொள்கை ӧ