பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆரம்ப அரசியல் நூல் டாக்கின. அது நாளடைவில் வளர்ந்து பலகாலம் சென்ற பின் அநேகமாகத் துய்மையும் செம்மையும் உடைய தாயிற்று. அரசியல் உணர்ச்சி ஜனத்தொகையிற் பெரும் பாலோரிடம் பரவியது. அரசு, நிலைபெற்றதாகவும் பெர்து ஜன ஆதர்வு பெற்றதாகவும் ஆயிற்று உறவின் முறை, சம யம், அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உள்ள தேவை ஆகிய இவை அரசை அமைப்பதற்கு முக்கிய காரணங்களாயின. இவற்றுள் உறவின் முறையானது குடும்ப பந்தத்தை ஆதாரமாகக் கொண்ட பல கூட்டங்கள் உண்டாக்கியது; ஆரம்பகாலத்தில் அது மிகவும் புலமாக இருந்ததோடு, அரசு உருப்பெற்ற காலத்திலும் டிேத்து இருந்து வந்தது. ஒற்று மைக்கு உரிய கருவியாகவும், அதிகாரத்துக்கு அநுமதி அளிப்பதாகவும் இருந்த மதமானது. ஆதிகாலத்துச் சமூகங். க்ளில் வேறு பிரிக்க் முடியாதபடி உறவின் முறையோடு இணைந்து கின்றது; அரசியல் ஒற்றுமை உண்டாக்குவ தற்குப் பெரிய பலமாக உதவியது. சமூகத் தொகுதி விரிய விரியச் சமூக வாழ்க்கை சிக்கலுடையதாயிற்று. அமைதி வேண்டும் என்ற குறையும், பாதுகாப்பு வேண்டுமென்ற தேவையும் அரசியல் அமைப்பிற்குக் காரணமான புலமுள்ள. தூண்டுகோல்கள் ஆயின. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . a. அரசு நாளடைவில் எவ்வாறு வளர்ந்தது என்பதைப் பற்றிய பொதுவான கொள்கைகளைக் குறிப்பிட்டோம். இதன் டி. இப்பொழுது, அழகு ஆரம்ப காலத்தில் எந்த வடிவத்தில் இருந்தது, பிறகு எப்படி எப்படி விருத்தியாகி வந்தது என்பவற்றை ஆராய்வோம். மனித வர்க்கத்தின் பூர்விக சரித்திரத்தில்ை சமூக அமைப் பானது உறவின் முறையிலிருந்து தோற்றியதென்று அறி. கிருேம். முதல் முதலில் ஒற்றுமை ஏற்படுவதற்குரிய பங்க மாகவும், அரசியலதிகாரத்தை அநுமதிக்க இடமளிப்பதாக வும் இருந்தது ரத்த் சிம்பந்தமே. குடும்பமே அரசின் பூர்விக வடிவமென்று சொல்லவேண்டும். ஆதிகாலத்துக் குடும் பத்தின் அமைப்பு எப்படி இருந்தது என்ற விஷயமாக வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இரண்டு 19