பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் விசேஷமான சொத்துரிமையைப் பெற்றிருக்கிருர்கள். ஆனல் ஆட்சியுரிமை தாய்வழியாக வராமல், கொச்சி திரு. வாங்கூர் அரசர்களைப்போல ஆண்மகனிடத்திலிருந்து ஆண் மகனுக்கு வருகிறது. . . . . . தங்தைவழிக் குடும்பம் எங்கும் பரவி யிருந்தது என்று கொள்ளவும் இயலாது. சமுதாய வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் அது அவசியமாக இருந்தது என்று சொல்வ தற்கும் இல்லை. - - ஆதிகாலத்துக் குடும்பம் இன்னவாறு இருந்தது என்று ஓர் உருவத்தைக் குறிப்பிட்டு நிச்சயமாய்ச் சொல்ல முடி யாது. பெரும்பாலான அரசுகள் ஏறக்குறையத் தங்தை வழிக் குடும்பங்களின் உறவிலிருந்தே உண்டாகி வளர்ச்சி பெற்றன. சாதாரணமான குடும்ப உறவென்னும் முறை இல்லாத குழுவிலிருந்து மிகச் சில அரசுகள் பரிணமித்தன. இரண்டும் ஒரே மாதிரியாக வளர்ந்தன. தந்தை வழி அதிக நெருக்கமாகவும் நீண்டதாகவும் இருந்தது. ஒர் இடத்தில் தாய் வழி உறவும் மற்ருேர் இடத்தில் தகப்பன் வழி ஆட்சியும் ஒருங்கே இருந்து வந்தமையே அக்காலத்து ரீதி என்று தெரிகிறது. இக்காலத்திலுள்ள அரசியற் கொள்கைகள் வளர்வதற்கு ஆதிகாரணமாக இருந்தவர்களும், இக்காலத்து அரசுகளைச் சிருஷ்டித்தவர் களுமாகிய ஜன சமூகத்தினர் தகப்பன் வழிக் குடும்பத் தையே அடிப்படையாகக் கொண்டு கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார்கள் என்ற விஷயத்தை மாத்திரம் நாம் சொல்ல முடியும். ஆரிய மக்களுள் பூர்விக காலத்தில், யாவரினும் பிராயம் முதிர்ந்த ஆடவனே அரசனுகவும் குருவாகவும் இருந்து குடும்ப பரிபாலனம் செய்து வந்தான். தங்தையின் அதிகாரம் கட்டுப்படுத்தப் பெருமல் இருந்தது. சொத்தும், குடும்பத்தினரின் உயிர்களுங்கூட அவன் கைக்குள் இருங் தன. ஒவ்வொரு குடும்பத்திலுள்ளவர்களும் ரத்த சம்பந்தத் தாலும் சமயப்பிணைப்பாலும் ஒன்றுபட்டு கின்ருர்கள். இத் தகைய குடும்பப் பகுதிகள் ஒன்று சேர்ந்து ஒரு வம்சம்; அல்லது வீடு ஆயின. அந்த வம்சத்துக்கு அதிபதியாக, 12