பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் வளர்ச்சி வரலாறு அந்த முறையில் இயல்பான குறைபாடுகள் சில இருக் தன. ஏகாதிபத்தியத்தையும், மத்திய அதிகாரத்தையும் வற்புறுத்தியதல்ை சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரும் விஷயத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை ரோமர்களால் விடுக்க முடியவில்லை. தனி மனிதனது சுதந்தரத்தையோ, ஸ்தல சுய ஆட்சியையோ வளர்ப்பதற்குரிய ஸ்தாபனங்களே அது உண்டாக்கவில்லே. - . . . பாளையப்பட்டு ஆட்சி அல்லது உம்பளிக்கை ஆட் சியை ஓர் அரசு என்று சொல்வது தக்கதா ? என்பதே * . . . . . . . . ஐயத்துக் கிடமானது. ஐரோப்பாவானது பலவேறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது. * - அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சட்டமின்றித் தாம் கண்டதே வழக்காக இருந்தன. ஒழுங் கின்மையும் அராஜகமும் நிலவின. சட்டத்திற்கும் அதிகாரத் திற்கும் முரண்பாடு உண்டாயிற்று. ஜனசமூகம் முழுவதை யும் பூரணமாக அடிமைப்படுத்தினர். ஒற்றுமையோ சுதந் திரமோ சாத்தியமானதாகத் தோற்றவில்லை. இந்த மத்திய காலங்களில் தன்னுடைய ஒற்றுமை குலேயாமல் இருந்தது ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சு ஒன்றுதான். அது ஏகாதி பத்திய அமைப்பு முறையைத் தழுவி அமைந்தது; அதிகார அமுலே ஆதரித்தது; தனி மனிதனுக்குச் சுதந்திரம் அவசிய மென்ற டியூட்டன்களின் கொள்கைகளையும், அரசனுக்குரிய உரிமைகளே வற்புறுத்தும் ரோமர்களின் கொள்கையையும் மறவாமல் இருந்த பாளையப்பட்டு ஆட்சிக் காலத்தில் அவ் விரண்டும் இணைந்து இக்காலத்து ஜனநாயக அரசுக் - கொள்கை எழுவதற்கு ஆதாரமாயின. . இத்தகைய சிக்கலான நிலையிலிருந்து நாளடைவில் ஒரு புதிய அரசியல் வாழ்க்கை தோற்றியது. வியாபாரம் : , தளிர்த்தது. வியாபார வகுப்பினர் தலை யெடுத்து விருத்தியாயினர். அவர்கள் கில வுரிமையாளர்களாகிய பெருஞ் செல்வர்களின் ஆதரவைப் பெற்ற பாளையப்பட்டு ஆட்சியை எதிர்த்தார்கள். சமய ஸ்தாபனங்களுக்குள்ளே புதிய சீர்திருத்த யோசனைகள் 17 o o: 5. பாளையப்பட்டு 6. தேசிய அரசு அ, ஆ, 2