உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் கிளம்பவே அங்கிருந்த ஒற்றுமை குலையத் தொடங்கியது. இயற்கையமைப்பிலுள்ள எல்லைகளால் வலிபெற்ற தேசிய ஜாதிப்பற்றுக் காரணமாகச் சிறிய சிறிய பாளையப்பட்டுக்கள் இணைந்து பின்னும் ஸ்திரமான பகுதிகளாயின. பிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, ஸ்விட்ஜர்லாந்து, நெதர்லாந்துகள், ருஷியா, பிற்காலத்து ஜர்மனி, இத்தாலி இவைகளெல்லாம் தேசிய அரசுகளாக வளர்ந்தன. - : । இப்படித் தனித்தனியான அரசுகள் ஏற்படவே, பொதுத் தலைமை வேண்டுமென்ற எண்ணம் மாறியது. அதுகாறும் தனித்தனியாக இருந்த பாளையக்காரர்களின் அதிகாரம் அழிந்தது. சர்வதேசச் சட்டப்படி அரசுகளுக்குள் சமத்துவம் இருக்கவேண்டுமென்ற கொள்கை எழுங்தது. மத்திய அதிகாரத்திற்குப் பெரிய விரோதிகளாக இருங் தவர்கள் பாளையக்காரர்களே. அவர்களுக்கு விரோதமாக அரசர்களும் ஜனங்களும் ஒன்று சேர்ந்தனர். தேசிய அர சானது நிர்ணயமற்ற கோட்ைசியாகப் பரிணமித்தது. அதற். குத் தனியே படையும், வரி விதிக்கும் திட்டமும் ஏற்பட் டன. பழைய பாளையப்பட்டு ஆட்சியின் வரிகள் போயின. பாளையப்பட்டு ஆட்சிக் காலத்தில் இருந்த பிரிவுகளைப் போலன்றி வேறுபட்ட பிரிவுகள் உண்டாயின; ஜனத் தொகுதி தனித்தனி ராஜ்யங்களாகப் பிரிந்தது. அவற்றி . . ., னிடையே ஒரே மாதிரியான நோக்கங் களும், ஒரேமாதிரியான கலங்களும் இருந் தன. புதிய கைத்தொழில் வகுப்பினர் புதிய நோக்கம் உடையராயினர். பழங்காலத்துக் குடியான வர்களின் நோக்கத்திற்கு அது வேறுபட்டது. ஜனத் தொகுதியினர் அடிமைத் தளையினின்றும் விடுபட்டுச் செல்வ விருத்தியும் அறிவு வளர்ச்சியும் அடைய அடைய அதிக மான அரசியலுரிமைகளையும் சலுகைகளையும் விரும்பினர் பிரதிநிதித்துவ சபைகள் மேன் மேலும் விரிந்த அஸ்திவாரத் தோடு வளரத் தொடங்கின. இதல்ை கட்டுப்பாடில்லாத கோட்ைசியி லிருந்து நாளடைவில் வரையறையுள்ள கோட்ைசி அல்லது ஜனநாயகம் உண்டாவது சாத்திய 18 7. இக்காலத்து ஜனநாயக அரசு