பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் அரசினல் பல திறப்பட்ட கூட்டு வேல்கள் செய்ய முடியும். ஜன சமூகத்திலுள்ள மற்ற உறுப்புக்களின் குறைகளே அதனால் நீக்கவும் இயலும். ஜன சமூகத்தைக் காப்பதோடு, குடிகளின் செல்வ வளர்ச்சியையும் அரசு கவனிக்கிறது. அரசுக்குரிய செயல்களெல்லாம் தக்கவண் ணம் நிறைவேறி வந்தால், ஒவ்வொரு பிரஜையும் கூடுமான வரையில் அபிவிருத்தியை அடைய முடியும். ஓர் அரசுக்கு நான்கு சிறப்பு இயல்புகள் உள்ளன. அவையாவன :-(1) ஜனத் தொகுதி, (2) தேசம், (3) அர சாங்கம், (4) சர்வாதிகாரம் அல்லது ஆண் என்பவை. ஜனத்தொகையென்பது அரசுக்கு இன்றியமையாத உறுப் . . . . புக்களுள் ஒன்று. மக்கள் இல்லாத பிர 1. ஜனத்தொகுதி தேசத்தில் அரசு ஏற்படாது. ஆனல் எவ். வளவு ஜனத்தொகை ஒர் அரசுக்கு வேண்டுமென்ற வரை யறை இல்லை. குடும்பத்தைவிட ஓர் அரசில் அதிக ஜனங்’ கள் இருக்கவேண்டும். ஆள்வோர், ஆளப்படுவோர் என்ற சம்பந்தம் அமைவதற்குப் போதுமான ஜனத்தொகை இருப் பது அவசியம். ஓர் அரசின் சிறப்பு அதன் ஜனத் தொகையையும், ஜனங்களின் தரத்தையும், அவர்கள் எங்கே கூடி வசித்து வருகிருர்களென்பதையும் பொறுத்திருக்கும். காட்டில் ஜனன மரண விகிதமும், குடியேற்றமும் ஜனத் தொகையின் கூடுதலுக்கும் குறைவுக்கும் காரணமாகின் 'றன. போர்செய்து பிற நாடுகளை வெளவும் மனப்பான்மை கொண்ட அரசுகள், வருஷங்தோறும் ஜனத்தொகை பெருகி. வரவேண்டுமென்று விரும்புகின்றன. - தேசமும் அரசுக்கு மிகவும் அவசியமானதே. பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் ஒர் அரசின் பிரஜைகள் வசித்து வரவேண்டும். வேறு அரசைச் சார்ந்த எல்லைகளிலிருந்து தனியே பிரிக்கப்பட்ட எல்லைகள் 2. தேசம் அதற்கு இருக்கவேண்டும். சமுத்திரத்தில் . . அரசு ஏற்படுவதில்லை. பூமியிலுங்கூட ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்காமல் திரிந்துகொண்டிருக்கும் கரிக்குறவர்கள், குடுகுடுப்பாண்டிகள் முதலியவர்களையுடைய 22