பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தற்கால அரசின் சிறப்பியல்புகள் மனிதர் கூட்டம் அரசு ஆகாது. அத்தகைய கூட்டங்களுக்கு அரசின் லக்ஷணங்கள் இல்லை; பிற அரசுகள் அவற்றை அர சாக அங்கீகரிப்பதும் இல்லை. இங்ங்னம் ஒரு நிலப்பகுதிக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனலேயே அரசு களுக்குத் தேசத்தின் பெயரையே இட்டு வழங்குகின்றனர். இக்கால அரசுகள் பலவகைப்பட்டன. விஸ்தீரணத்தில் சில சதுரமைல் முதல் பல் லக்ஷம் சதுர மைல் வரையில் பரவிச் சிறியனவும் பெரியனவுமாகப் பலதரங்கள் படைத்த வைகளா யிருக்கின்றன. பெரியதை அடுத்துச் சிறியது இருத்தலும் உண்டு. மிகப் பண்டைக் காலத்திலும் இடைக் காலத்திலும் இவ்வாறே பெரிய தேசிய அரசுகளுக்கும் சாம் ராஜ்யங்களுக்கும் அருகே சின்னஞ்சிறு நகர அரசுகளும் எற் பட்டிருந்தன. . . . . r ു முன்னாளில் இந்தியாவில் பஞ்சநதி தீரத்திலும் கங்கை யமுனேச் சமவெளியிலுங்தான் அரசுகள் நிலைபெற்றுச் செழித் தோங்கின. மத்திய இந்தியாவைப் போன்ற மலைப்பிரதே சங்களிலும் காடுகளிலும் குடிகள் பழைய நிலைமையிலேயே இருந்து வருகிருர்கள். - ருஷியா தேசம் ஒரு பரந்த சமவெளி யாகையால் சீன தேசத்தைப்போல அதன் அரசு ஒரு சாம்ராஜ்யமாகவே இருந்து வந்திருக்கிறது. ஸ்விட்ஜர்லாந்து, ஹாலந்து, கார்வே, ஸ்பெயின், இத்தாலிபோன்ற தேசங்கள் இயற்கையாகவே குறுகிய எல்லைக்குள் அமைந்து விட்டமையால் சிறிய தேசீய அரசுகளாகவே இருந்து வருகின்றன. . . . - இவற்ருல் அரசின் விரிந்த அளவும் குறுகிய அளவும் இயற்கை யமைப்பை ஒட்டியே அமைதல் விளங்கும். - அரசுக்கு மூன்ருவது முக்கிய லக்ஷணம் அதன் அமைப் பாகும். அரசியல் அமைப்புக்கு அரசாங்கம், துரைத்தனம் என்று தமிழிலும், கவர்ன்மெண்டு என்று ஆங்கிலத்திலும் - பெயர் வழங்கும். அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட உருவம் வேண்டியதில்லை. ஆனல் அதன் ஆணேக்கு மற்றவர்கள் அடங்கி கடக்கும் கிலே மையில் அது அமைக்கப் பெற்றிருக்கவேண்டும். உள்நாட் 3. அரசாங்கம் 23