பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் பாய்க்கும், அரசை அப்பலகைகள் ஒன்ருேடொன்று இணைந்து நிற்கச் செய்யும் பொருட்டுச் சுற்றிக் கட்டியுள்ள இரும்புப் பட்டத்திற்கும் ஒப்பிடலாமென்று ஒர் ஆசிரியர் கூறியுள்ளார். . அரசாங்கம், சர்க்கார், துரைத்தனம என்ற் சொல்லப் படுவது அரசு என்பதைவிட்க் குறுகியது. அரசியல் அதிகா - ரங்களே ஒரு குறிப்பிட்ட காலத்தில் வகித்து வரும் ஒரு மனிதனையோ அல்லது சில மனி ಣ பயா தர்களையோ குறித்து வழங்குவது அரசாங்க மென்னும் பெயர். ஒரு காட்டில் வாழும் மக்கள் யாவரும் அங்காட்டின் அரசைச் சார்ந்தவர்கள். ஆனல் அவர்கள் எல்லோரும் அரசாங்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்க முடி யாது. மேலும், அரசு ஒரு பிரதேசத்தைக் குறிக்கும்; அர சாங்க மென்பதோ ஒரு மனிதத் தொகுதியைத்தான் குறிக் கும். " . . . * , r . சாதாரணமாய் ஒரே எல்லேக்குள் வசித்து வருபவராயும், பாஷை மதம் இவைகளில் ஒன்றுபட்டவராயும், ஒரே மாதிரி - யான பழக்க வழக்கங்களும் குளுதிசயங் . ಶಿ களும் உள்ளவர்களாயும் இருப்போரது T தொகுதியைத் தேசியஜாதி யென்று சொல் வர். வருணத்தையோ வகுப்பையோ குறிக்கும் ஜாதி வேறு; தேசியஜாதி வேறு. ஆங்கிலத்தில் இதனை நேஷன்' என் பர். அக் கூட்டத்தாரிடையே தோன்றும் ஐக்கிய உணர்ச்சி யைத் தேசியஜாதி உணர்ச்சி என்று சொல்லலாம். அரசியலி ல்ை பல வகுப்பினர்களுக்குள் ஏற்படும் ஐக்கிய உணர்ச்சிக் கும் இந்த ஜாதி உணர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. அரசியற் கட்டுப்பாட்டினல் தேசீயஜாதி உணர்ச்சி உண்டாவதில்லை. அது மதாபிமானம், தேசப்பற்று முதலிய மனோபாவங்களால் ஏற்படுகின்றது. உதாரணமாக: ஆந்திர்மக்கள் இந்தியா வில் பல மாகாணங்களில் சிதறியிருந்தாலும் ஒரே ஜாதியின ராவர். நெடுநாளாக ஐக்கியம் பெற்றுள்ள பிரிட்டிஷ் தேசத் தாரில் ஆங்கிலேயர், ஸ்காட்சுக்காரர்; வெல்ஷ்காரர் என்ற மூன்று தனி ஜாதியினர் அடங்கியுள்ளனர். . . . . . . . . r 26.