பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் சர்வாதிகாரம் தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை பெறவேண்டு மென்ற கொள்கை நாளடைவில் வலியடைந்திருக்கின்றது. ஆல்ை இம்முறையை விரிந்த அளவில் மேற்கொள்வதும் கூடாது. இம்முறையினல் பல சின்னஞ் சிறிய அரசுகளே ஸ்தாபிக்க நேரிடும ; அப்போது சுங்கம், போக்கு வரவு, வியாபாரம் போன்ற விஷயங்களில் அந்த அரசுகளுக்குள் அநாவசியமாகப் பல சிக்கல்கள் நேரவும் கூடும். மேலும், வரம்புகடந்த தீவிர தேசிய உணர்ச்சியானது பிறகாட்டோடு பகைகொள்ளும் நிலையில் கொண்டுவந்து விடும் சந்தர்ப்பமும் உண்டு. அரசுகளுக்குள் சண்டையும் போட்டியும் பெருகலாம். இவ்வாறு, மிகையான தேசாபி ம்ானத்தினல் வீண் நஷ்டத்தை உண்டுபண்ணிய பேதைமை முயற்சிகள் பலவற்றைச் சரித்திரத்தினல் அறியலாம். ஆயி னும் உண்மையான தேசிய உணர்ச்சி உலக ஒற்றுமைக்கு. விரோதமான போக்குடையதன்று. அது உலக ஒற்றுமைக்கு ஒரு முதற்படி என்றே சொல்லவேண்டும். இதனை உட் கொண்டே, 'தேசிய உணர்ச்சியானது மனிதனே மனித வர்க் கத்துடன் பிணைத்து இருசாராருக்கும் வலிமை யூட்டுகின் றது" என்று மேதாவிகள் சொல்லுகிருர்கள். |அத்தியாயம் 4| அரசின் சர்வாதிகா ரம் இனி அரசுக்கும் அதன் பிரஜையாகிய தனி மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை ஆராய்வோம். இத்திறத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு. அவை அரசின் சர்வாதிகாரம், தனிமனிதனின் சுதந்திரம் என்பனவாம். ஓர் அரசின் சிறப்பியல்பு அதன் சர்வாதிகாரமாகும். இக் காலத்திலுள்ள அரசு சர்வாதிகாரம் படைத்த அரசாகும். ஆதலின் அது மனிதர் கூடிய மற்றச் சங்கங்களைப் போலன்றிப் பூரணமான சுயேச்சை கொண்டது. வேருேர் 29