பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் வும்:குடிகளால் மதிக்கப் பெறுவதற்கு உரியவை. தொழிற் சங்கங்களிலும் பொருளாதாரக் குழுக்களிலும்.நடைபெறும் " - சுய ஆட்சி, அரசின் முக்கியமான வேலைகள்ே. நிறைவேற்றுவதற்குப் பெரிய சாதனமாக உதவுகின்றதோடு, அந்தச் சங்கங்கள் - அரசின் தொடர்பின்றியே நடப்பவை யாயும் அரசைவிடச் சில விஷயங்களில் திருப்தி தரக்கூடிய முறையில் செயலாற்றுவனவாயும் இருக்கின்றன என்று ஒரு சாரார் கூறினர். மற்றச் சங்கங்களின் அதிகாரத்தைப் போலவே அரசின் அதிகாரமும் இருக்க வேண்டுமென்று வேறு சிலர் கூறினர். அரசு இருக்க வேண்டியது அவசியங் தான் ; ஆல்ை அதன் அதிகாரம் குறைவாக இருக்க வேண் டும். வேறு வகையான சங்கங்கள் தமக்குள் சண்டையிடும் படி நேரும் சக்தர்ப்பங்களில் தலையிட்டு ஒற்றுமை நிலவும் படி செய்யும் அதிகாரம் மாத்திரமே அதற்கு இருக்க வேண் டும்' என்று மற்ருெரு வகையினர் எடுத்துரைத்தனர். சமஷ்டி ஏற்பாட்ட்ை ஆதரிப்பவர்கள், " அரசுக்குச் சர்வாதிகாரம் அத்தியாவசியமன்று. சர்வாதிகார அரசுகளைப் போலவே, அரைகுறையான அதிகாரம் வகிக்கும் அரசு களும், சர்வாதிகாரமே இல்லாத அரசுகளும் உலகத்தில் இருக்கின்றன. உதாரணமாக: சமஷ்டி அரசாட்சியில் சர் வாதிகாரம் பெற்ற ஸ்தாபனம் ஒன்றுமே இல்லை. அரசிய லதிகாரம அவ்வாட்சியில் இரண்டுபட்டிருக்கின்றது. அவ் வதிகாரமானது அரசியல் திட்டத்தில் நிர்ணயித்திருக்கிறபடி மத்திய அரசாங்கத்துக்கும் சமஷ்டியில் சேர்ந்த தனி நாடு களின் அரசுகளுக்கும் பங்கிடப்பட்டிருக்கிறது” என்று சொல்லுகிருர்கள். இவ்வாறு பல வகையான ஆட்சேபங்கள் இருந்தாலும், சட்டப்படி வேருெரு ஸ்தாபனத்தின் தலைமைக்கு உட் படாமல், பூரண சுயேச்சையைக் கொண்டுள்ள தேசமே அரசு என்ற பெயருக்கு ஏற்றதென்பதை இக்கால்த்தில் எல்லோரும் ஒப்புக்கொள்கிருர்கள். அரசின் ஒருதலைப்பட்ட சர்வாதிகாரக் கொள்கையைத் ஒருதலப்பட்ட சர்வாதிகாரத்துக் குரிய தடைகள் 83.