பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆரம்ப அரசியல் நூல் வதற்கு இல்லை; என்ருலும், அத்தகைய பிரகடனம் அல் லது உரிமைச் சாஸனம்' பொதுமக்கள் மனத்தில் அரசின் பால் கம்பிக்கையை உண்டுபண்ணுவதோடு, வரம்புகடந்த யதேச்சாதிகாரம் செலுத்துவதற்குத் தடையாகவும் நிற்கும்; குடிமக்களின் வாழ்க்கையில் உயர்ந்த லகதியத்தை நிறுவு வதற்கு அது ஒரு நல்ல சாதனமாகவும் பயன்படும். இனி, அரசாங்கம் சம்பந்தப்பட்டவரையில் பிரஜை களுக்குள்ள உரிமைகளைக் கவனிப்போம். பிரிட்டனில் ஒவ் . . வொரு பிரஜையும், சட்ட ஆட்சிமுறை'யின் క్ట్ర பாதுகாப்பைப் பெறுகிருன் பிரசித்தி " பெற்ற இந்தப் பிரிட்டிஷ் முறையில் இரண்டு சிறப்பான அம்சங்கள் பொதிந்திருக்கின்றன. ஒன்று: எல்லாவற்றிற்கும் மேலான சட்டத்தின் அதிகாரம் அரசாங்கம் தன் இஷ்டம்போல் மக்களிடத்தில் அதிகாரம் செலுத்த முடியாது. சட்டத்தை மீறில்ை மாத்திரமே ஒரு வன்க் தண்டிக்கலாம். அரசாங்க நடவடிக்கைகளையும் 'கியா யத்திற்கு இசைந்தவை என்று நீதிபதிகள் அங்கீகரிக்க வேண்டும்; இல்லையேல் சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் உத்தரவின்மேல் எந்த மனிதனையும் கைது செய்யவோ, . சிறையிலிடவோ முடியாது. இரண்டாவது அம்சம் வருமாறு: சாமான்ய நீதிமன்றங் களில் வழங்கும் பொது வகையான சட்டத்திற்கு ஒவ்வொரு மனிதனும் உட்பட்டவன் என்பதே சட்ட ஆட்சிக்கு ஆதார மான கருத்து. சட்டத்தின் முன்னிலையில் எல்லோரும் சமம் என்ற கருத்தைக் கொண்ட இந்தக் கொள்கையில்ை, தோட்டி முதல் தொண்டைமான் வரையில் ஒவ்வோர் உத்தி யோகஸ்தனும், தன் தவறுகளுக்காக நீதி மன்றங்களில் சட்டப்படி குற்றி விசாரணைக்கு உட்பட வேண்டியவ கிைருன் பிரான்ஸிலும் ஐரோப்பாவினுள் உள்ள மற்ற நாடுகளிலும், ஆட்சிமுறைச் சட்டம்' என்ற தனி விதிகளின் படி, நிர்வாக நீதி மன்றங்க்ள் என்னும் தனி நியாய்ஸ்தலங் க்ள் உள்ளன; அங்கே நிர்வாக உத்தியோகஸ்தர்களின் குற்றங்கள் விசாரணைக்கு வருகின்றன.அத்தேசங்களிலுங் 38