பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயேச்சையும் சமத்துவமும் கூட இக்காலத்தில் நிர்வாக நீதி மன்றங்கள்.' சர்க்கார் உத்தியோகஸ்தர் விஷயத்தில் பொதுஜனங்களின் உரிமை களேப் பாதுகாக்கும் முறையிலேயே அமைக்கப்பெற் - சமீப காலங்களில் பிரஜா உரிமைகளின் தன்மையிலும் அளவிலும் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள்ே விளக்கிக் காட்டச் சில உதாரணங்களைக் குறிப்பிடுவோம். சிறு பான்மை வகுப்பினருக்குத் தங்கள் பாஷைகளையும் சமுதாய சம்பிரதாயங்களையும் போற்றி வரும் உரிமை கிடைத்திருக் கிறது. காட்டுக் கைத்தொழில்களையும் வியாபாரத்தையும் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதும், காட்டு கலத்துக்கு மாருன செயல்களைத் தடுப்பதும் இக்கால அரசின் முக்கிய மான கடமைகளென்ற கருத்து உலகில் நிலவுகிறது. அத்தியாயம் 6 சுயேச்சையும் சமத்துவமும் அரசு சர்வாதிகார முடையதாக இருக்கும்போது பிரஜை களுக்குச் சுயேச்சை இருப்பது இயலும்ா ? இரண்டும் ஒருங்கே நிலவ முடியுமா?-இந்த விஷயத்தில் பெரிய அபிப்பிர்ாய பேதங்கள் இருந்து வருகின்றன. தனி மனித னுடைய சுயேச்சைக்கு ஊறு செய்யாத வகையிலும், ஒவ் வொருவனும் சட்டத்திற்கு உட்பட்டு உண்மையான சுதக் தரத்தை அனுபவித்துவரும் அளவிலும் அரசாங்கம் எல்லாப் பிரஜைகளின் மேலும் அதிகாரம் வகித்து வருமாஞ்ல் அப் போது இவ்விரண்டும் ஒன்றுபட்டு நிற்கும். அந்த நிலை ஒரு சிறந்த லகதியமாகும். பிரஜைத் தன்மை தக்க முறையில் ஓர் அரசில் அழைய வேண்டுமானல் பிரஜைகளுள் ஒவ்வொருவனும் வாழ்க்கைத் துறைகளெல்லாவற்றிலும் தானே அபிவிருத்தி பெறுவதற்குரிய வசதிகள் ஒருபடியனவாய் இருக்க 89.