பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் மைக்கு உகந்ததா என்பது. இரண்டாவது: அக்காரியத்தை நிறைவேற்துவதற்கு உபயோகிக்கும் சாதனங்களால் எண் ணிய பயன் விளையுமா என்பது. மூன்ருவது: அதல்ை ஏற். படும் செலவும் கிடைக்கும் பயனும் ஈடாகுமா என்பது. இம் மூன்று கேள்விகளுக்கும் உரிய விடைகள் எக்காலத்தும் எவ் விடத்தும் ஒரு மாதிரியே இரா. காலத்தையும் இடத்தை யும் அரசின் அடிப்படையான கொள்கைகளையும் பொறுத்து அவ்விடைகள் அமையும். * இக்காலத்து அரசின் செயல் பிரஜைகளின் வாழ்க்கை யின் அடிப்படையிலிருந்தே தொடர்புடையது. சுதந்திரம், சொத்து, நல்வாழ்க்கை, பொது மக்களின் rேமம் முதலி யவை அரசின் வேலைகளைச் சார்ந்தன. உள்நாட்டு அமை தியை நிலைநாட்டுவதும், வெளிநாட்டுத் தாக்குதலைத் தடுப் பதுமே அரசின் முக்கியமான கடமை யென்ற பழைய கொள்கை இப்போது முற்றும் கைவிடப்பட்டது. ஓர் அர. சின் உபயோகமும், செல்வாக்கும் தனி மனிதனுக்கும் ஜன. சமூகத்துக்கும் அவ்வரசு செய்துவரும் தொண்டைப்பொறுத் திருக்கின்றனவேயன்றி, பிரஜைகளின்மேல் அது செலுத்தி, வரும் ஆணையையும், கிளர்ச்சியையும் பொறுத்தவை அல்ல. அறியாமை, வறுமை, நோய், வீண்கஷ்டம் முதலியவற்றைப் போக்கவேண்டித் தாகூரிண்யமின்றித் தீவிரமாக முயல்வதே இந்நாள் அரசின் கட்மைகளிற் பெரும்பகுதியாக அமைக் திருக்கிறது. அரசு என்பது பாதுகாப்பின் பொருட்டு ஏற் பட்டிருக்கும் ஒரு போலீஸ் ஸ்தாபனம் என்ற கொள்கை' மாறி, சமூக நன்மையையும். அபிவிருத்தியையும் நாடுவதே - அதன் நோக்கமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உறுதி பெற்றுவிட்டது. உணவு, உடை, இருக்கை முதலிய வசதி களே அளிக்கும் பொறுப்போடமையாமல் ஜனங்களின் மனப் பயிற்சிக்கு வேண்டிய கல்வி நிலயங்கள், புத்தகாலயங்கள், பூங்காக்கள், காட்சிச்சாலைகள், ரேடியோ முதலிய சாதனங் களையும் பிற செளகரியங்களையும் உண்டாக்கும் பொறுப் பைக்கூட இக்கால அரசு ஏற்றுக்கொண்டு கிர்வாகம் செய்து வருகிறது. - ””。 , | 46

  • -*