பதிப்புரை
(முதற் பதிப்பு).
வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையிலும் ஓரளவு அறிவு பெறவேண்டியது பொது மக்களுக்கு அவசியமாகும். பெரிய ஆராய்ச்சிகளின் நுணுகிய போக்கிலே அவர்கள் யாவரும் ஈடுபடா விட்டாலும் தினந்தோறும் பழகிவரும் பொருள்களைப் பற்றியும், ஒவ்வொரு நாளும் கேள்வியுறும் விஷயங்களைப்பற்றியும் அறிந்தால் அவர்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் இன்பமும் திறமையும் உண் டாகும். இந்த அடிப்படையான அறிவை வளர்க்கப் பாடு படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது சென்னைப் புஸ்த காலயப் பிரசார சங்கம்.
சாதாரண ஜனங்களுக்கும் விளங்கும்படியான முறையில் விஞ்ஞான சாஸ்திர விஷயங்களேயும் அரசியல் நூற் செய்திகளையும் உணர்த்தும் புஸ்தகங்களை இச்சங்கம் வெளிப்படுத்தியிருக்கின்றது. விடிந்தெழுந்தால் மந்திரிசபைகளின் மாற்றங்களையும் அரசாங்க மாறுபாடுகளையும் பற்றிய புதிய புதிய செய்திகள் காதில்விழும் இக்காலத்தில் அரசியலைப் பற்றி அறிந்து கொள்வதற்குரிய புஸ்தகங்கள் பல வேண்டும். இதற்குமுன் முக்கிய அரசியல்-திட்டங்கள் என்ற நூல் இச்சங்கத்தின் ஆதரவில் வெளிவந்தது. அந்தப் புஸ்தகத்தை எழுதியவராகிய ஸ்ரீ ந. ரா. சுப்பையர் எம். ஏ., எல். டி. அவர்களும்,ஸ்ரீ வித்துவான். கி. வா. ஜகந்நாதன் в. о. L. அவர்களும் சேர்ந்து இந்நூலை எழுதியிருக்கிறர்கள். புஸ்தகா லயப் பிரசார சங்கத்தின் நோக்கத்திற்கு இணங்க அமைந்தர்" இதனை வெளியிட இச்சங்கம் ஏற்றுக்கொண்டது. + . .
இதனை எழுதிய ஸ்ரீ ந. ரா. சுப்பையரவர்களுக்கும் ஸ்ரீ
கி. வா. ஜகந்நாதனவர்களுக்கும் இதற்கு ஒரு முன்னுரை எழுதியுதவிய, சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீ ஸி. ஆர்.ஸ்ரீநி வாஸனவர்களுக்கும் இச்சங்கம் தன் நன்றியைத்ஸ் தெரிவித்துக் கொள்கின்றது. - .