பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் நோக்கங்களும் செய்கைகளும் 5ாளடைவில் அமைதியாக ஏற்பட வேண்டும் என்பதே. அவர்கள் கோக்கம். ஸோஷலிஸத்தின் தீவிரக் கொள் கைக்குச் சமதர்மக் கொள்கை (கம்யூனிஸம்) என்று பெயர். அதன்படி, வகுப்பு வித்தியாசங்கள் ஒழிகிறவரையில் தொழி லாளர்களின் நன்மையின்பொருட்டு அரசாங்கங்கள் பலாத் காரமாகத் தம் அதிகாரத்தைச் செலுத்தி வரவேண்டும்; பொருள் உற்பத்திச் சாதனங்கள் யாவும் பொதுவுடைமை யாக வேண்டும். ஒவ்வொருவனும் தன் தன் சக்திக்கு ஏற்ற வேலையிலமர்ந்து தன் தன் தேவைக்கு வேண்டிய ஊதி யத்தையே பெறவேண்டும்’ என்பதுதான் சமதர்ம வாதி களின் கோட்பாடு, ருஷிய ஸோவியத் அரசு இம் முறையை மேற்கொண்டு அரசியலேத் திருப்தியாக கடத்த முயன்று

  • அபேதவாதக் கொள்கைத் திட்டம் நடைமுறைக்கு

ஒவ்வாததென்று பல ஆசிரியர் அதைக் கண்டித்த எழுதி யிருக்கின்றனர்; ' ஊதியம் கிடைக்கும் என்ற ஆசையின் தாண்டுதலின்றிப் பொருள் உற்பத்தியில் ஜனங்களுக்கு ஊக்கம் இருக்குமா? அரசாங்க கிர்வாகிகள் அரசியல் வேலை களேயும், ப்ொருளாதார விஷயங்களையும் சேர்த்துத் திறம்ை. யுடன் கவனித்து வரமுடியுமா?’ என்று கேட்கின்றனர். இது முடிவில் உத்தியோகஸ்தர் ஆட்சியாகவே மாறி அம் முறையினல் நேரும் தீமைகள் யாவும் உண்டாவதற்கு இடம் கொடுக்கும் என்றும் கருதுகின்றனர். ஆனால், அதிதீவிரமான ஜனநாயக அரசாங்கங்களில் கூட அபேதவாதம்பரவி வருகிறது. வரம்புக்கு உட்படாமல் மேலும் மேலும் சுயநலக்காரர்கள் இடும் போட்டியின் விளை வாக ஏற்பட்ட பெரும் கேடுகளைத் தடுக்க விரிவான அபேத வாதத் திட்டங்களே மேற்கொள்ள் வேண்டிய அவசியம் பல அரசாங்கங்களில் உண்டாகியிருக்கிறது. பிரிட்டன், ஜர்மனி முதலிய நாடுகளின் நடைமுறையரசியலில் அபேதவாதக் கொள்கை மிகுதியாக வழங்கி வருகிறது. பலவிதமான அபேதவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பொதுத் தேர்தல் களில் வெற்றி பெற்றுச் சட்ட சபைகளில் புகுந்து, தங்கள் 49 ஆ. அ. : -