பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* அரசியல் திட்டங்களின் ഖഞ് வாத அரசுகளில் இளைஞரும் முதியரும் சுயநலமற்ற ஊழியம் செய்ய முன்வருகின்ற்னர். சர்வாதிகாரிகள் இடைவிடாமல் ஜன சமுதாயத்தின் முன்னேற்றத்தின் பொருட்டுப் பாடு பட்டு வருகின்றனர்; வறுமை, வேலையின்மை இவற்றைப் போக்கத் திருப்திகரமான முயற்சிகளைச் செய்கிருர்கள். இதனுல்தான் இதுவரையில் ஸ்மஸ்தவாத அரசுகள் எல்லாம் ஒருவாறு தடையின்றி நிகழ்ந்து வருகின்றன. • . . ஆல்ை இந்த ஆட்சி முறையில் உண்டாகும் கஷ்டம் மிகப் பெரிது. படைகளே ஸித்தமாக வைத்திருத்தல், ஜனங் கள் யாவரையும் ராணுவ மயமாக்கல், தலைவர்களுக்குள்ளே கம்பிக்கைக் குறைவு, பிரதிக்ஞைகளினின்றும் வழுவுதல் என்னும் இவைகளோடு கூடிய இந்த ஆட்சி முறையில்ை நிச்சயமாக மனித ஜாதியின் கெளரவம் போய்விடும். இந்த நஷ்டத்தை மக்கள் உணருங்காலம் வரும்போது, தனியாண செலுத்தும் சர்வாதிகாரம் மறைந்து மனிதனின் சுதந்தர உணர்ச்சி மீண்டும் எழுந்து உயர்ந்து, கிரேக்கர்கள் பெற்ற தைப்போல உச்ச ஸ்தானத்தை அடையும் என்று தோன்று கின்றது. - - . . . . . . . எல்லாவற்றையும் ஆலோசிக்கையில் ஜனநாயக ஆட் சியே சிறந்த அரசியல்முறை என்பது அனுபவத்தில் தெரிய வருகிறது. வேறு எந்த முறையிலும் தனி மனித உரிமைக் கும் பொதுஜன கன்மைக்கும் தேசீய வளர்ச்சிக்கும் இவ் வளவு பாதுகாப்பும் சந்தர்ப்பமும் ஏற்படுவதில்லை. அத்தியாயம் 9 அரசியல் திட்டங்களின் வகை ஒவ்வோர் அரசிலும் அதற்கெனக் குறிப்பிட்ட அரசியல் திட் டம் ஒன்று உண்டு. அதன்படியேதான் அரசியல் விய வகாரங்கள் நடைபெறும், அரசியல் திட்டமானது அர சாங்கத்தின் அதிகார எல்லையை நிர்ணயித்துத் தனி மனி 57.