பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆரம்பு அரசியல் நூல் மனிதனும் சமஷ்டி அரசியலின் பிரச்னைகளும் சிக்கல்களும் தனக்கு நெருங்கிய சம்பந்தமுள்ளவை யல்லவென்ற கினை வில்ை அவைகளே அசட்டை செய்தாலும், தன் சொந்த காட்டின் அரசியல் விஷயங்களில் ஈடுபட்டு ஊக்கத்துடன் . தொண்டு செய்து வரச் சந்தர்ப்பங்களும் செளகரியங்களும் அதிகம் உண்டு. ஆகையால் ஒரு பிரஜைக்கு ஸ்தல ஆட்சி யில் தீவிர உணர்ச்சியும், தேசிய உணர்ச்சியும் உண்டாகின் ற்ன. அன்றியும், அரசியல் விஷயங்களையும் அதிகாரங்களே யும் சமஷ்டி ஸ்தாபனத்திற்கும் அதற்கு அங்கமாகிய தனி நாடுகளின் அரசாங்கங்களுக்கும் பிரித்துக் கொடுப்பதால், நிர்வாகம் எளிதாகிறது. திருப்திகரமாக அமைக்கப்பெற்ற சம்ஷ்டி அரசியலில்தான் பிரஜாவுரிமைகள் போதுமான அளவில் பாதுகாக்கப்பெறும். எனவே, அரசியல் கூட்டுறவு இயக்கத்தில் சமஷ்டி அமைப்புத்தான் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாகிறது. ஆல்ை, அதை ஏற்று கடத்தும் தலை வர்கள் மிக்க.திறமையும் அறிவுத்திறனும் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். சமஷ்டி அமைப்பின் ஒரு பெரிய குறை நெருக்கடிக் காலங்களில்தான் வெளிப்படுகிறது. யுத்த காலத்திலும், வெளிகாட்டு விஷயங்களில் ஏற்படும் சிக்கல்களைச் சரிப் படுத்தவேண்டி வரும் காலத்திலும் சமஷ்டி அரசியல் திற மையாகவும் திருப்திகரமாகவும் நடைபெறுவதில் லே. இ ரட்டை ஆட்சியின் காரணமாக வீண்செலவும், கவைக் குதவாத சிக்கல்களும் ஏற்படுவது மற்ருெரு குறையாகும். சில தனி நாடுகள் சமஷ்டி அரசாங்கத்துடன் உறவு பூணுமல் முரண்பட்டால் பொதுச் சட்டங்களைப் பிரயோகிக்கலாம்; ஆனல் தாகதிண்யமின்றி எங்கும் ஒரே மாதிரியாக அச்சட் டங்களே நிறைவேற்றி வைப்பது சமஷ்டி அரசாங்கத்திற்கு எளிதில் இயல்ாத காரியமாகி விடுகிறது. அதனுல்தான் சமஷ்டி அரசாங்கங்களெல்லாம் நாளடைவில் தனி நாடு களின் செல்வாக்கைக் குறைத்து மத்திய ஸ்தாபன்த்தின் அதிகாரங்களை விரிவாக்கிப் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. ... .x - . .” - - 62