பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகம் (5) சட்ட நிர்மாண வேலை ;-நிர்வாக இலாகாவுக்கு விதிகளை விதிக்கும் முக்கிய அதிகாரம் உண்டு. அவசரச் சட்டங்களையும் பொது விதிகளையும் யாருடைய சம்மதமு மின்றி இயற்றலாம். இவற்றிற்குச் சட்ட சபையால் கிர் மாணிக்கப் பெற்ற சட்டங்களைப் போன்ற செல்வாக்கு உண்டு. -- நிர்வாக இலாகாவுக்கு இம்மாதிரியான பரந்த அதிகா ரங்கள் இருப்பதால், அவ்விலாகா தன் இஷ்டம்போல் அதி காரம் செலுத்தக்கூடும். பிரிட்டிஷ் நீதிபதி ஒருவர் இத் தகைய புதிய யதேச்சாதிகாரத்தை முற்றும் தாக்கி எழுதி யிருக்கிருர் . சில சமயங்களில், சட்டசபை இயற்றிய சட் டங்களைக் கூட, சரியாகப் பரிசோதனை செய்யப்படவில்லை என்ற வியாஜத்தால், கிர்வாகப்பகுதி நிறைவேற்ருமல் முட் டுக்கட்டை போடலாம். என்ருலும் கடைசியில் சட்ட சபையின் அதிகாரமே ஓங்கி நிற்கும். . உண்மையில் இப்பொழுது நிர்வாகம் கடத்திவருபவர் களப்பற்றி இனி ஆராய்வோம். பிரிட்டன், பிரான்ஸ் முதலிய தேசங்களில் முழு நிர்வாகப் பொறுப்பும் அதிகாது. மும் மந்திரி சபையிடம் ஒப்பிக்கப்பட்டிருக்கின்றன. அச் சபைக்குப் பிரதம மந்திரியே தலைவர் ஆவர். மங்திரிசபை சட்டசபைக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்புடை யது. அதனால் அதற்குப் பார்லிமெண்டரி நிர்வாகம் என்று பெயர். அமெரிக்க ஐக்கியநாடுகளில் நான்கு . . . . . . . . سه ، سم ಕ್ಡ வருஷங்களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படும் குடியரசுத் தலைவரே பேருக்கும். ீழ் உண்மையிலும் நிர்வாகத்தல்வர். ஆவ . . . .- ருடைய மந்திராலோசனைச் சபையின் அங்கத்தினர்கள் ஆவருக்குத்தான் பதில் சொல்லவேண்டிய வர்க ளாகையால் அவருடைய அதிகாரத்திற்கு முற்றும் கீழ்ப்பட்டவர்கள். இதற்குத் தலைவரின் நிர்வாகம் என்று லோவியத் ருஷ்யா, ஸ்விட்ஜர்லாந்து என்னும் இரண்டு தேசங்களில் மாத்திரமே, நிர்வாக அதிகாரம் முழுதும் ஒரு